Header Ads



தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லாத நிலையில், சம்பந்தன் எவ்வாறு அந்த கூட்டமைப்பிற்கு தலைவராக இருக்க முடியும்


தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லாத நிலையில், இரா.சம்பந்தன் எவ்வாறு அந்த கூட்டமைப்பிற்கு தலைவராக இருக்க முடியும் என இலங்கை தமிழரசு கட்சியின்  கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவிராசா கேள்வி எழுப்பியுள்ளார்.


இலங்கை தமிழரசு கட்சியின்  கொழும்பு கிளை தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவிராசா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய அரசியலை சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்பிற்குள் நுழைந்ததாகவும், திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி, சம்பந்தனைக் கொண்டே அதனை நடைமுறைப்படுத்தியதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தமிழரசு கட்சியைத் தவிர வேறொரு கட்சியும் இப்போது இல்லை என்பதை தாங்கள் அறிவீர்களா, எனவும் K.V.தவசராசா தமது கடிதத்தினூடாக இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


கூட்டமைப்பு இல்லாமல், அதன் தலைவர் என்ற பதவியும் பறிபோய், நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இரா. சம்பந்தன் நிற்பதைக் காண மனம் சகிக்கவில்லை எனவும் K.V.தவராசா குறிப்பிட்டுள்ளார். 

 

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எந்த முகத்துடன் சென்று ரணிலுடன் பேச்சு நடத்த முடியுமெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.