Header Ads



முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தது ஏன்..? ஹிஸ்புல்லா கூறிய காரணம்


- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் -


முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் செவ்வாய்கிழமை, 10 ஆம் திகதி ஓட்டமாவடி காவத்தமுனையில் வைத்து, தனது தாய்க் கட்சியான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் மீள இணைந்துகொண்டார்.


இந்தநிலையில், ஜப்னா முஸ்லிம் இணையம் ஹிஸ்புல்லாவை தொடர்பு கொண்டு, இதுகுறித்து கேட்ட போது, அவர் குறிப்பிட்டதாவது,


எனது ஆதரவாளர்கள் ஒரு பக்கமும், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் மறு பக்கமும் முஸ்லிம் காங்கிரஸில் இணையுமாறு என்னிடம் வலியுறுத்தினார்கள்.


இந்நிலையில் தூய நோக்குடன் நான், முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டடேன்.


எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவும், கட்சியின் வெற்றிக்காகவும்  செயற்படுவேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவேன். இதன்மூலம் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும்.


முஸ்லிம் காங்கிரஸிடம் நான் எந்தப் பதவியையும் கோரவில்லை. காலப் போக்கில் கட்சி எனக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கும் என எதிர்பார்க்கிறேன் எனவும், ஹிஸ்புல்லா ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் குறிப்பிட்டார்.


1 comment:

  1. காலம் கடந்த தீர்மானமாக இருந்த போதிலும் இது நல்லதொரு முடிவு. இதன் பிறகாவது நயவஞ்சகர்கள், சூழ்ச்சிக்காரர்கள் இல்லாத நல்ல பலமுள்ள கட்சியை உருவாக்க முடியும். இதே போல ரிஷாதும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து ஒரு கட்சியாக செயல்பட்டால் பலமுள்ள கட்சியாக மாற்ற முடியும். எதிர்காலத்தில் பல வடிவங்களில் வரும் என எதிர்பார்க்கப்படும் துவேசங்களை முறியடிக்க முஸ்லிம்களும் தமிழ் கட்சிகளும் ஒன்றாக செயற்பட்டால் மட்டுமே இனவாதத்தை இந்த நாட்டிலிருந்து அழிக்க முடியும்.அதைவிட்டு பல கிழக்கு மாகாணத்தில் மஹிந்தவுக்கு வால்பிடித்த அந்த கஞ்சாக்கார நபர் போல ஒரு நபரை வைத்துக் கொண்டு கட்சியமைப்பதன் முடிவு. தோல்வியும்,இழிவும் அவமானமும்தான் என்பதை இந்த கட்சிகள் இப்போதாவது புரிந்து செயற்பட்டால் அனைவருக்கும் நாட்டுக்கும் அது நன்மை பயக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.