Header Adsமனைவியை முன் ஆசனத்தில் அமரவைத்து பஸ் ஓட்டிய சஜித் - இதுவே இன்று சகலரினதும் பேசு பொருள் என்கிறார்


சஜித் பிரேமதாஸ பஸ்களை வழங்குவதே இன்று சகலரினதும் பேசு பொருளாக மாறியுள்ளதாகவும்,மேலும் சிலர் சஜித் பஸ்ஸை செலுத்துவதாக தெரிவிக்கின்றனர் எனவும்,அதனால் தானக்கு பஸ் மேன் என கின்டலடிக்கின்றனர் எனவும்,இவ்வாறு கின்டலடிப்பது VIP மற்றும் VVIP சோசலிசவாதிகள் எனவும்,இத்தகைய காட்போர்ட் இடதுசாரிகளின் கின்டல்களை தான் பொருட்படுத்துவதாக இல்லை எனவும்,இவர்களின் விமர்சனங்களுக்காக பஸ் பகிர்வதை நிறுத்தப்போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


இவ்வாறே,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ​பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு ஆரோக்கியத் துவாய் தொடர்பில் புதிய நடவடிக்கை எடுக்க யோசனை முன்வைக்கப்பட்ட சமயத்திலும் தான் பேட் மேன் என்று அழைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


விமர்சனங்களை விட விடயதானங்கள் ஆலோசிக்கப்பட வேண்டும் எனவும், இவ்வாறான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முதன்மை நோக்கம் இந்நாட்டில் கல்வியில் காணப்படும் பிளவைக் குறைப்பதே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (3) தெரிவித்தார்.


சோசலிசம் பற்றிப் பேசுபவர்கள்,ஆடம்பர வசதிகளை அனுபவிக்கிறார்கள் எனவும், நாட்டின் குழந்தைகள் பாதிக்கப்படும்போது அவர்களின் குழந்தைகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கிறார்கள் எனவும்,ஆடம்பர குளிரூட்டப்பட்ட கட்சி அலுவலகங்களை நிர்மானித்து,இப்படியான கின்டல்களைச் செய்வதன் மூலம் இத்தகைய காட்போர்ட் சோசலிஸ்டுகளுக்கு ஏமாற மாட்டோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பஸ்களை வழங்குவதன் மூலம் கல்வியில் நிலவும் வேறுபாடுகளை களையவே தாம் முயற்சிப்பதாகவும்,நாட்டிலுள்ள செல்வந்தர்களின் பிள்ளைகள் சர்வதேச பாடசாலைக்கும் தனியார் பாடசாலைக்கும் செல்வதாகவும்,அவர்கள் அனைத்தையும் ஆங்கில மொழியில் கற்றுக்கொள்கின்றனர் எனவும் அரச பாடசாலைகளில் இத்தகைய போக்கு முகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.


கொழும்பை மையமாகக் கொண்ட பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் கணனி ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள்,மொழி ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன என்றாலும், கஷ்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் அவ்வாறான வசதிகள் இல்லை எனவும்,இதன் காரணமாக கல்வியில் பெரும் பாகுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரிவை இல்லாதொழித்து அனைவருக்கும் சமமான கல்வி முறையை உருவாக்குவதற்கான முதற்கட்டமாக பஸ் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


அரச பாடசாலை மாணவர்கள் போட்டிகளுக்கு வாடகை வாகனங்கள் எடுத்துச் செல்லும் நிலையே தற்போது நிலவுவதாகவும்,பஸ் வழங்குவதன் ஊடாக குறித்த பிரச்சினைக்கு குறிப்பிட்டளவு தீர்வு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


தேசிய மற்றும் வெளிநாட்டு தனவந்தர்கள் தம்மையும் தங்கள் கட்சியையும் நம்புகிறார்கள் எனவும்,ஏனென்றால் தம்மைச் சுற்றி கமிஷன் பெறுபவர்கள் மற்றும் ஊழல் செய்பவர்கள் இல்லை எனவும்,அந்த நம்பிக்கையைப் பாதுகாத்துக்கொண்டு அத்தகைய திட்டங்களை வெளிப்படத்தன்மையுடன் செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


எழுபது வருட ஜனநாய நாட்டில் அபிவிருத்தியென்ற போர்வையில் வரியை சூறையாடினர் எனவும்,எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்கள்,

தொழிற்சங்களை மேற்கொண்டு அரசியலை மேற்கொண்டனர் எனவும்,இந்த சம்பிரதாய போக்குக்கு அப்பால் சென்று தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சி புதிய கற்பிதங்களை சேர்த்தாகவும் அவர் தெரிவித்தார்.


இளைஞர்கள் முறைமை மாற்றத்தையே கோருகின்றனர் எனவும்,நாங்கள் அந்த முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவோம் எனவும்,நாட்டின் கல்வித்துறைக்கும் சுகாதாரத்துறைக்கும் சேவையாற்றுவதற்காக பதவிகள் அவசியமில்லை எனவும்,

ஜனாதிபதி,பிரதமர்,அமைச்சுக்கள்,

இராஜாங்க அமைச்சுக்கள் என பதவிகள் இவற்றைக்கு அவசியமில்லை எனவும் தாம் இயலுமை ஆற்றல் கொண்டவராக இருந்தால் இத்தகைய பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.


சம்பிரதாய கட்டமைப்பிலிருந்து வெளியேறி செயற்படக்கூடிய தலைவர் இந்நாட்டிற்குத் தேவை எனவும்,வருங்காலத் தலைவருக்கு டொலர்,பவுன்களை நாட்டிற்குக் கொண்டு வரும் திறன் இருக்க வேண்டும் எனவும், தற்போது ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இது போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 58 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று மொரட்டுவை மெதடிஸ்ட் உயர்நிலை தேசியப்பாடசாலைக்கு நேற்று (03) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.