பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, ஜஸ்வர் உமர் நீதிமன்றத்தில் மனு
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவர் ஜே. ஸ்ரீ ரங்கா உள்ளிட்டோருக்கு உத்தியோகபூர்வ கடமைகளை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவு நாளை(19) வரை அமுலில் இருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி ஜஸ்வர் உமர் மேன்முறையீட்டு நீதிமன்றில் செய்த மனுவுக்கு அமைய இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (14) நடைபெற்ற இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தலில் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் போட்டியிடும் வாய்ப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் இறுதி நிமிடத்தில் தடுத்துள்ளதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனக்கு தலைவர் பதவிக்கு வாய்ப்பு வழங்காமல் பாரிய அநீதி இழைத்ததாக நேற்று பிற்பகல் ஜஸ்வர் உமர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதேவேளை, உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜே. ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட நிர்வாகிகள் இன்றைய தினம் (18) கடமையேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment