Header Ads



பிரேசில் வன்முறை - கவலை வௌியிட்டுள்ள ஜனாதிபதி


பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


இலங்கையும் அரசியலமைப்புக்கு முரணான வழிமுறைகள் மூலம் ஜனநாயகக் கட்டமைப்புகளை கவிழ்க்க குழுக்களின் இதேபோன்ற முயற்சிகளை அனுபவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற விரோதங்கள் கண்டிக்கப்படுவதாகவும் இந்த மோதல் நேரத்தில் பிரேசில் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுடன் உறுதுணையாக நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பிரேசிலில் பெரும்பான்மையான மக்கள் கொதித்தெழுவதற்கு காரணம் என்ன? ஏன் அவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள் என்பதை யாரும் ஆராய்வதோ, அது பற்றி சிந்திப்பதோ இல்லை. அதே நிலைமைதான் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் என்பது பெரும்பான்மையாக பொதுமக்கள் ஒன்றிணைந்து ஒரு சிறு கூட்டத்துக்கு வாக்குகளை வழங்கி அவர்கள் ஆட்சி மூலம் மக்களுக்கு நன்மைஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதன் காரணமாகத் தான் ஆட்சியாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். ஆட்சியாளர்கள் என்பது பொதுமக்களின் சேகவர்கள். பொதுமக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதை திட்டமிட்டு கிடைக்கும் வளங்கள் மூலம் அவர்களின் தேவையை நிறைவுசெய்வதுதான் அரசின் கடமை. அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கின்றது. அதற்கு மாற்றமாக பொதுமக்களின் விருப்பத்துடன் தெரிவு செய்யப்படாத ஒருவர் எப்போதும் பொதுமக்களின் தேவைகள் பற்றி பொருட்படுத்துவதில்லை. அந்த நிலைமை தான் இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. இங்கு ஆட்சியாளர்கள் மாபெரும் கள்வர்களாக மாறி, பொதுமக்களின், அரசுடைமையின் சொத்துக்களையும் உடைமைகளையும் சூறையாடுவதற்காக அரச அதிகாரத்தையும் பாதுகாப்புப்படையின் அடக்குமுறையும் பயன்படுத்தி பொதுமக்களை நசுக்கிவைத்து அவர்களின் சுதந்திரத்தையும் அவர்களின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்கி வைத்து சர்வாதிகாரமற்ற திரைமறைவிலான சர்வாதிகாரத்தைப்பாவித்து நாட்டைச் சூறையாடுவதைத் தொடர்கின்றனர். இந்த எல்லா அநியாயங்களையும் இறைவன் மிகவும் நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றான். பொதுமக்களாகிய நாம் சத்தமிட்டால் அதிகாரத்தைப்பாவித்து மக்களை அடக்க முயற்சி செய்வார்கள். நாம் இன்னும் பொறுமையைக் கையாண்டு சற்று பொறுமையாக இருப்போம். ஆனால் எமது பொறுமை எவ்வளவு தூரம் பயன்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.