போதைப்பொருள், கொலை, பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு மரண தண்டனையே தீர்வு
போதைப்பொருள், கொலை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது தனிப் பட்ட கருத்து என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
போதைப்பொருள் பரவல் எந்த வகையிலேனும் கட்டுப் படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், போதைப்பொருள் வியாபாரத்தைக் கைவிடுமாறு போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தார்.
போதைப்பொருள், கொலை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது கருத்து எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
அந்த தண்டனையை உடனடியாக அமுல்நடாத்துமாறு நாம் இந்த அமைச்சரை வேணடிக் கொள்கி்னறோம். அப்போது பாராளுமன்றத்தில் தேர்தல் வைக்காமலேயே பிரச்சினைகளை முடித்துவிடலாம்.
ReplyDelete