Header Ads



மின் கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டோம், 69 6.9 மில்லியன் கையொப்பங்களும் சேகரிப்பு


உத்தேச மின்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று -09- தெரிவித்துள்ளதுடன், இலங்கை மின்சார சபை கடந்த சில வருடங்களாக பாரிய நட்டத்தைச் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.


மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என தெரிவித்து 6.9 மில்லியன் மின் பாவனையாளர்கள் கையொப்பமிட்ட பொது மனுவை இன்று தனது அலுவலகத்தில் ஏற்றுக்கொண்டஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, குறைந்தபட்சம் ரூ. 35 பில்லியன் இலங்கை மின்சார சபையிலிருந்து மறைமுகமாக வெளியேறுகிறது எனவே மின்சார சபை நஷ்டம் அடையாது என தெரிவித்தார்.


நஷ்டத்திற்கு முக்கிய காரணம் ரூபா35 பில்லியன் என்பதை துல்லியமாக நிர்வகிக்க இயலாமையே ஆகும். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை எடுக்கும்போது நாட்டின் வழமையான வரிக் கொள்கை மீறப்பட்டுள்ளது.


ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியை மதிப்பிடும்போது, US$90 விலை வித்தியாசம் உள்ளது. இந்தக் கணக்கீட்டில் பிழை உள்ளது என்றார் அவர்.


இதன் விளைவாக, அமைச்சரவை முடிவை நிராகரிப்பதற்கும், தவறான மதிப்புகளின் அடிப்படையில் மின்கட்டண உயர்வை நிராகரிப்பதற்கும் ஆணைக்குழுவிற்கு முழு அதிகாரம் உள்ளது.


"மின் கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவு அமைச்சினால் எடுக்கப்பட்ட சட்டவிரோதமான முடிவு" என ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. இலங்கை மின்சார சபையிலிருந்து பின்கதவால் ரூபா 35 பில்லியன்கள் ெவளியேறுவதாக பொறுப்பான பொதுமக்கள் ஆணைக்குழுவின் தலைவர் முறையிட்டால் ஏன் அவர் அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்காமல் பின்நிற்கின்றார். அதன்மூலம் பொறுப்பான அவருடைய கடமையைச் செய்வதில் அவர் விசுவாசமாக நடப்பதில்லை என்பது தான் உண்மை. அவர் நேர்மையாக பணியைச் செய்தால் அந்த 35 பில்லியன் எங்​கே செல்கிறது அதுபற்றி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு அதற்கு அநியாயத்துக்கு எதிராக சட்ட நடவடிக்ைக எடுத்து அந்தபணத்தை திருப்பிப் பெற்று அந்த களவாடலை நிறுத்தினால் அவர் கூறுவது போல மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை. பாரளுமன்றமும் அமைச்சரவையும் நிச்சியம் இதற்கு எதிராக எதுவும் செய்யாது. ஏனெனில் அந்த மூவாயிரத்தி ஐநூறு கோடி ரூபாவின் பெரிய பங்காளிகள் உயர்மட்டங்களில் நிச்சியம் இருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.