Header Ads



இந்தியாவில் 5 ரூபாவுக்கு விற்கப்படும் முட்டையை, இலங்கையில் 45 ரூபாவுக்கு விற்க முடியுமா..?


இந்தியாவில் 5 ரூபா தொடக்கம் 10 ரூபா வரையான விலையில் விற்கப்படும் முட்டையை எவ்வாறு இறக்குமதி செய்து இலங்கையில் 45 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.


இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு இருபது இறக்குமதியாளர்கள் விலை மனுக்களை சமர்ப்பித்துள்ள போதிலும் அவை இன்னும் திறக்கப்படவில்லை என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறினார்.


இவ்வாறான நிலையில், இலங்கைச் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் முட்டையின் விலையை எவ்வாறு கூறுவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


அதன் காரணமாக விலை மனுக்கள் விடப்பட்ட விலையை உடனடியாக பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

1 comment:

  1. இலங்கைக்கு முட்டையை இறக்குமதி செய்து மக்களிடையே விநியோகிக்க ஒரு அரசாங்கம் தேவையில்லை. இறக்குமதியையும் நியாயமான விலைக்கு விநியோகம் செய்யவும் மிகவும் திறமையான நியாயமாக நடக்கக்கூடிய கம்பனிகள் இலங்கையில் போதியளவு காணப்படுகின்றன. இதை அரசாங்கம் செய்வதாக இருந்தால் இலஞ்சம் எடுக்கவும் கமிசன் அடிப்பதும் தவிர வேறு எந்த நோக்கங்களும் கிடையாது.

    ReplyDelete

Powered by Blogger.