Header Ads



மரத்துடன் மோதிய பஸ் - 47 பேர் மீட்பு


- டி.சந்துரு -


நுவரெலியாவில் இருந்து ஹொரணை வரையிலும் பயணித்த தனியார் பஸ், நானுஓயா குறுக்கு வீதியில் தேயிலைச் செடிகளுக்கு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


25 மீற்றர் தூரத்துக்கே இவ்வாறு பயணித்துள்ளது. இன்று (08) மாலை 3.30 மணிக்கே விபத்துக்கு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் இடம்பெற்ற வேளையில் அந்த பஸ்ஸூக்குள் குழந்தைகள் உட்பட 47 பேர் இருந்துள்ளனர். எனினும், அவர்களில் எவருக்கும் எவ்விதமான அனர்த்தங்களும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


அந்த பஸ் சவுக்கு மரத்தில் முட்டிமோதி நின்றுள்ளது. இல்லையேல் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை, வெளிமாவட்டங்களில் இருந்து. நுவரெலியாவுக்கு சொந்த வாகனங்களில், அல்லது வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் சுற்றுலா வருபவர்களும், வாகன சாரதிகளும் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.



1 comment:

  1. இந்த பஸ் விபத்தை அவதானிக்கும் போது வாகனங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் பாதை காணப்படுகின்றது. அல்லது மழையுடன் கூடிய காலநிலையில் வாகனங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை தென்படுகின்றது. எனவே வௌியூர்களில் இருந்து குறிப்பாக கொழும்பு கொழும்பை அண்டியுள்ள பகுதிகளிலிருந்து வாகனங்களில் நுவரெலியா செல்லும் வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் கவனமாக, நிதானமாக மெதுவாக, கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை ஓட்டுவதன் மூலம் பாதை விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.