200 மில்லியன் செலவில் சுதந்திர தின கொண்டாட்டம் தேவையா..? கருப்புப் பட்டி கட்டிய ஹிருணிகா
நாட்டில் மக்கள் தீராத பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டு சுதந்திர வைபவத்தை நடத்துவது எந்த விதத்தில் நியாயமாகும் என திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர கேள்வியெழுப்பியுள்ளார்.
சுதந்திர தின விழா ஏற்பாடுகள் நடைபெறும் காலிமுகத்திடலுக்கு சென்ற ஹிருணிகா அங்கிருந்து ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
நாட்டில் குழந்தைகளுக்கு உணவில்லை! பாடசாலை செல்ல வழியில்லை! மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்காத அரசாங்கம் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. நாட்டின் மக்கள் துன்பப்படும் நிலையில் ரூ. 200 மில்லியன் செலவில் சுதந்திர தின கொண்டாட்டம் தேவையா?
அரசாங்கம் திருடர்களுடன் சேர்ந்து சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஹிருணிகா மேடை தூண்களுக்கு கருப்பு பட்டி கட்டி தனது எதிர்ப்பை வெளிப்ப டுத்தியுள்ளார்.
Post a Comment