மண்டேலாவைப் போன்ற கௌரவம், மரணத்தின் போது மகிந்தவுக்கு கிடைக்க வேண்டும்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய சேவை அனைத்தையும் செய்துவிட்டார்.
இனி அவர் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“மகிந்தவின் தலைமைத்துவம் இல்லை என்றால் இப்போதும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும். அவர் 80 வயதை நெருங்குகின்றார்.
அவர் ஓய்வெடுப்பது நல்லது. யாரும் அவரை அவர்களின் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தினால் அதற்கு நான் இணங்கமாட்டேன்.
நெல்சன் மண்டேலாவின் மரணத்தின் போது உலகத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்படியொரு கௌரவம் மகிந்தவுக்குக் கிடைக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார். ibc

உலகப் புகழ்பெற்ற பொய்யனான உமக்கும் அதை விடப் பெரிய பொய்யனும் அனைத்து பஞ்சமா பாதகச் செயல்களையும் செய்துவிட்டு இன்னுமின்னும் தொடர்ந்து நாட்டிலும் மக்கள் மத்தியிலும் பொய்யையே தூவிக் கொண்டு மக்களை வழிகெடுக்கும் அத்தனை பேருக்கும் இறுதி முடியும் எப்படி அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.கடவுள் தூங்குவதில்லை. மிக நுணுக்கமாக அனைத்தையும் நன்கு அவதானித்துக் கொண்டிருக்கின்றான். அவன் ஒருபோதும் யாருக்கும் அநீதி செய்வதில்லை. ஆனால் மனிதர்கள் செய்த அநியாயத்தின் விளைவுகள் நூற்றுக்கு நூறு சரியாக இந்த உலகிலும் மறுமையிலும் மிகவும் சரியாக அனுபவிப்பார்கள்.
ReplyDelete