Header Ads



வங்கிக் கணக்குகளை அடிக்கடிச் சரி பாருங்கள் - ஹேக் செய்யப்பட்ட 13 மில்லியன் ரூபா


வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்த குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு இரண்டு உக்ரேனியர்கள் மற்றும் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.


நவம்பர் 24 ஆம் திகதி சந்தேக நபர்கள் வணிகரின் வங்கிக் கணக்கிற்கு அனுமதியற்ற பெற்று அதிலிருந்து 13.7 மில்லியன் ரூபாயை மற்றுமொரு கணக்குக்கு மாற்றியுள்ளனர்.


சந்தேக நபர்கள் நவம்பர் 30ஆம் திகதி கொழும்பு நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, டிசெம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


நாட்டில் கணினி குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்த பொலிஸார், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், வங்கிக் கணக்குகளை அடிக்கடிச் சரிபார்த்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.