Header Ads



பதவி விலகினார் வில்லியம்சன்


 நியூசிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் , டெஸ்ட் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் . 


கேன் வில்லியம்சன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் எஞ்சிய போட்டிகளுக்கு தலைவராக தமது பொறுப்பை நிறைவேற்ற மாட்டார் . இருப்பினும் அவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . 


டெஸ்ட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் தொடர்பான அவதானத்துடன் , நியூசிலாந்து கிரிக்கெட் இன்று காலை வில்லியம்சனின் பதவி விலகலை அறிவித்தது , புள்ளிகளின் அடிப்படையில் நியூசிலாந்தின் கிரிக்கெட் வரலாற்றில் வில்லியம்சன் சிறந்த டெஸ்ட் தலைவராக கருதப்படுகிறார் . 


மேலும் அவரது தலைமையில் 40 போட்டிகளில் 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நியூஸிலாந்து அணி 10 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது . மேலும் 8 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன . 2021 இல் சவுதாம்ப்டனில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து முதல் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கு அணியை வழிநடத்தியதில் கேன் வில்லியம்ஸன் பெரும் பங்குவகித்தமை குறிப்பிடத்தக்கது .

No comments

Powered by Blogger.