Header Ads



வைத்தியசாலைக்கு வரும் பெண்கள் 'இப்படிச் செய்ய வேண்டாம்'


வீட்டில் கணவன்மாரின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான பெண்கள், தான் தாக்குதலுக்கு உள்ளானதை மருத்துவரிடம் கூறாது மறைப்பதாக கொழும்பு காசல் பெண்கள் வைத்தியசாலையின் மகபேறு மற்றும் நரம்பியல் தொடர்பான சிறப்பு மருத்துவர் லக்ஷ்மன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹொட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் அவர் இதனை கூறியுள்ளார்.


இவ்வாறு வைத்தியசாலைக்கு வரும் பெண்களின் 50 வீதமானவர்கள் தம்மை கணவன் தாக்கியதை கூற விரும்புவதில்லை.


கணவனால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு வரும் பெண்களில் பலர் தாம் கீழே விழுந்து காயமடைந்து விட்டதாகவும் அல்லது வேறு பல காரணங்களையும் கூறுவதாகவும் லக்ஷ்மன் சேனாநாயக்க கூறியுள்ளார்.


குறிப்பாக கர்ப்பிணி பெண்களும் வீடுகளின் அதிளவில் சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறு சித்திரவதைகள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகும் கர்ப்பிணி பெண்களின் கரு கலைந்து விடுவதுடன் குறைந்த எடை கொண்ட பிள்ளைகள் பிறப்பது மற்றும் இரத்த போக்கு போன்றவற்றை எதிர்நோக்கி வருகின்றனர்.


இப்படியான சித்திரவதைகளுக்கு உள்ளாகி மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு வீதமானோர் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். எனவும் மருத்துவர் லக்ஷ்மன் சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.  tamilw

1 comment:

  1. டாக்டர் லக்ஷமன் சேனாநாயக்கா அவர்கள் மேற்படி கருத்தரங்கில் வௌியிட்ட செய்திகள் மிகவும் பாரதூரமானவை. இந்த நாட்டில் கணவன்மார்களின் தாக்குதல், வீடுகளில் நடைபெறும் வன்செயல்கள் காரணமாக பெண்கள், பா ரிய உடல்காயங்கள், கருக்கலைவு, மனநிலை பாதிப்படைதல் உற்பட எதிர்காலத்தில் பிறக்கப் போகும் குழந்தைககளுக்கும் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் இந்த குடும்ப வன்முறைகளை எவ்வாறு தடுக்கலாம், கணவனும் மனைவியும் குடும்பத்தில் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ என்ன மாற்றங்கள் சமூகத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை அரசாங்கமும், சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடும் நிறுவனங்களும் தனிப்பட்ட நபர்களும் குறிப்பாக மதப் போதனைகளுடன் தொடர்பான பௌத்த மதகுருமார்கள்,இந்து முஸ்லிம் சமூகத்தின் தலைமைகளும் குறிப்பாக மௌலவிமார்கள், மதப் போதகர்களும் இந்த விடயத்தை மிகவும் பாரதூரமாக எடுத்து குறித்த காலத்தில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் குறுகிய நெடுங்கால திட்டங்களை தீட்டி உடனடியாக செயல்பட வேண்டும். இதனை நாம் அலட்சியமாகக் கருதினால் இந்த நாட்டில் எதிர்கால சமூகம் அங்கொட வைத்தியசாலையில் வசிப்போர்களின் தரத்தில் இருப்பார்கள். அவர்களை ஆளும் வர்க்கம் அங்கொட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் வாழ்வின் இறுதிநிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக இருப்பார்கள். இனி இலங்கை பற்றியும் இலங்கையர்கள் பற்றியும் உலகம் எந்த நிலையில் மதிக்கும் என்பது பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த பணியில் உடனடியாக ஈடுபட உரியவர்களைத் தூண்டி செயல்பட முனைவோம்.

    ReplyDelete

Powered by Blogger.