Header Ads



ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு


 ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று (11) நடைபெறவுள்ளது.


பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் கட்சியின் மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.


இதில் சுமார் 25,000 பேர் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.


ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல நட்புக் கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ஐக்கிய மக்கள் சக்தி என்பது வெறும் பெயர் மட்டும் தான் பொதுமக்களை மீண்டும் படுகுழியில் தள்ளி அவர்களை மேலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளும் இறைவரி சட்டமூலம் சென்ற வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 1ம் திகதி 2023 ல் சட்டமாக்கப்பட்டுள்ள சர்த்துகளின் படி பொதுமக்களின் வருமானத்துக்கு 36% வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் மாதத்துக்கு 100,000 ரூபா வருமானமுள்ளவர்கள் 6% வரி செலுத்துவதுடன் அதற்கு மேல் மாதாந்த வருமானம் பெறுபவர்கள் 36% வரை வரி செலுத்த வேணடும். இது பொதுமக்களால் தற்போதைய நிலைமையில் தாங்க இயலாது. இந்த சட்டத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட போது 79% கட்சிக்கு சார்பாகவும் 36% எதிராகவும் வாக்களித்தனர். அப்படியாயின் எதிர்க்கட்சியில் 36% மாத்திரம் தான் பாராளுமன்றத்துக்கு சமூகமளித்திருந்தனர். அப்படியானால் ஏனைய 44% வீதமான எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் எங்கே. அவர்களுக்கு இந்த நாட்டு பொதுமக்கள் பற்றிய எந்த அக்கறையும் இல்லை என்பது இதன் மூலம் மிகத் தௌிவாகத் தெரிகின்றது. அதற்கிடையில் வருடாந்த மாநாடுகள் நடத்துகின்றார்களாம். இந்த நாட்டு பொதுமக்களைப் பாதிக்கும் பாரதூரமான சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் போது தூங்கிக் கிடக்கும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த மக்கள் தான் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும். பொதுமக்கள் பெரிய எதிர்பார்ப்புகளுடன் அவர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்து அனுப்பிய பாராதூரமான குற்றத்தை இந்த நாட்டு மக்கள் தான் இழைத்திருக்கின்றார்கள். இதன்பிறகாவது இது போன்ற பாரதூரமான குற்றங்களைச் செய்யாது இனிவரும் காலங்களில் அவர்களையும் மற்றவர்களையும் காப்பாற்றிக் கொள்வது பொதுமக்களின் மிகப் பெரிய கடமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.