Header Ads



கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் சந்தேகநபர் கைது



- பாறுக் ஷிஹான் -

வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம்  கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(5) இரவு   மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி  3ஆம் பிரிவில்    வைத்து   சந்தேக நபர்    விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.


இவ்வாறு கைதான நபர்  ஆரையம்பதியை பகுதியை  சேர்ந்த 42 வயது  மதிக்கத்தக்கவர்  என்பதுடன் சந்தேக நபர்   வசம் இருந்து பல கோடி பெறுதியான வலம்புரி சங்கு ஒன்று  மறைத்து வைக்கப்பட்ட நிலையில்  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


இச்சோதனை நடவடிக்கையின் போது   விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்   டி.சி வேவிடவிதான  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்   பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில்   பொலிஸ் பரிசோதகர்   எஸ்.எம்.பி.பி.எம்   டயஸ்  தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்   எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443)   உள்ளிட்ட  பொலிஸ் கன்டபிள்களான  அபேரட்ன (75812) நிமேஸ் (90699) பிரசன்ன (90669)  சாரதி ஜெயரட்ண( 19786) உள்ளிட்ட  அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

   

 பின்னர்  கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்கள் யாவும்  காத்தான்குடி    பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.




No comments

Powered by Blogger.