Header Ads



லிட்ரோவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது


லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாயினாலும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாயினாலும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதன்கடி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு தற்போது 4,360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு 4,610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


5 கிலோகிராம் சமையல் எரிவாயு  புதிய விலை திருத்தத்துக்கு அமைய 1850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


மேலும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு புதிய விலை திருத்தத்துக்கு அமைய  860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.