Header Ads



காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு சர்வதேச அமைப்புகளிடமிருந்து பணம் வந்ததா..?


காலிமுகத்திடல் போராட்டத்தை வழிநடத்திய செயற்பாட்டாளர்களுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து பெருந்தொகை பணம் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.


போராட்டகாரர்களுக்கு பேருந்துகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதற்காக சர்வதேச அமைப்பொன்று பணம் வழங்கும் என கூறப்பட்டதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் ஒன்றில் கூறியுள்ளார்.


காலிமுகத்திடல் போராட்டம் நடைபெற்ற காலத்தில் கிடைத்த பெருந்தொகை பணம் போராட்டத்தின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் புழங்கியதாக சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தலீப பீரிஸ் தெரிவித்துள்ளார். twin

1 comment:

  1. அரசாங்கத்தின் அநீதியைக் கண்டு சகிக்க முடியாத பொதுமக்கள் காலிமுகத்திடலில் ஒன்றுகூடி அரசாங்கத்துக்கு அவர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க அவர்கள் அங்கே தங்கியிருந்தால், அவர்கள் என்ன சாப்பிடுவார்கள், அவர்களுக்கு யார் அடிப்படை வசதிகளைச் செய்வது, அவர்களின் குடும்பத்தின் நிலை என்ன, வௌிநாட்டில் பணிசெய்யும், அங்கு வசிக்கும் அவர்களுடைய உறவுகள், நண்பர்கள் கட்டாயம் அவரகளுடைய அன்றாட செலவுகளுக்கு பணம் அனுப்புவார்கள், அவ்வாறு பணம் அனுப்பியவர்கள் பயங்கரவாதிகள் என யார் நிரூபித்துவிட்டார்கள், இந்த அபாண்டத்தை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் சமூகமளித்த பொறுப்பான சட்டத்தரணிகள் இவ்வாறு பொதுமக்களைப் பயங்கரவாதிகள் எனக்குற்றம் சாட்டினால் அது எவ்வளவு பாரதூரமான குற்றம். அதுபற்றி ஆராயும் சட்டமா அதிபர், அவர்கள் ஏன் அங்கு கூடினார்கள். அதற்கான காரணங்கள் என்ன? அவற்றைத் தவிர்ப்பதற்கு அவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா?

    ReplyDelete

Powered by Blogger.