Header Ads



இந்த மனிதர் என்ன நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கின்றார், இதனை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்


பாதுகாப்பு அமைச்சு இம்முறை வரவு செலவுத்திட்டத்திலும் மிக அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல வர்த்தகர் கொழும்பு நகரில் அடித்து சர்வ சாதாரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அப்படியானல், பொது மக்களின் நிலைமை என்னவென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேளவி எழுப்பியுள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நடந்துள்ள கொலை


பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதை நாங்கள் பார்த்தோம். அவரை பொரள்ளை கனத்தை மயானத்திற்குள் கொண்டு சென்றுள்ளனர்.


அப்படியானால், இந்த நாட்டின் பாதுகாப்பு எங்கே என்று நாங்கள் கேட்கின்றோம். பாதுகாப்பு அமைச்சு இம்முறை வரவு செலவுத்திட்டத்திலும் மிக அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுக்கும் நிலையில், பிரபல வர்த்தகர் ஒருவர் வீதியில் தாக்கி இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.


அப்படியானால், சாதாரண மக்களின் தலைவிதி எப்படியானதாக இருக்கும். பாதுகாப்பு இல்லை என்றால், ஏன் அதிகளவு பணம் பாதுகாப்பு அமைச்சு ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் என்ன செய்துக்கொண்டிருக்கின்றார்.


மக்கள் வீட்டில் இருந்து வெளியில் வர முடியாது உள்ளே ஒழிந்திருக்க நேரிடும். பாதுகாப்பு அமைச்சு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்குமாயின் நாட்டின் வர்த்தகர்கள் மட்டுமல்ல சாரதாண மக்களின் பாதுகாப்புக்கும் பாதுகாப்பு அமைச்சரே பொறுப்புக்கூற வேண்டும்.


வர்த்தகர்கள் அடித்து கொலை செய்யப்படுவார்கள் என்றால், அவர்களுக்கு வெளியில் வர முடியாத நிலைமை ஏற்படுமாயின், அவர்கள் எப்படி வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள்?.


அப்போது வர்த்தகம் வீழ்ச்சியடையும். உண்மையில் இது நாட்டின் பொருளாதார நெருக்கடியின் ஒரு பக்கம். மக்களுக்கு வருமானம் இல்லை என்பதால், பல சிறிய ரவுடி குழுக்கள் உருவாகியுள்ளன.


கடன் வாங்கும் ஒருவருக்கு கடனை திரும்ப செலுத்த முடியாமல் போனால், மாற்று வழிகள் பற்றி சிந்திப்பார். இதுதான் எனக்கு புலப்படும் நிலைமை. பாதுகாப்பு அமைச்சரான நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்காமல் இருக்கின்றார்.


பாதுகாப்பும் வழங்குவதில்லை. மக்களின் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்துவதில்லை.மனித உரிமைகளையும் உறுதிப்படுத்துவதில்லை. கருத்து சுதந்திரத்தையும் பாதுகாப்பதில்லை.


இந்த மனிதர் என்ன நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கின்றார். இதனால், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை அவர் ஏற்கவேண்டும். பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளால், மக்களின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


இதனை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதில் இருக்கும் ஆபத்தான நிலைமையை புரிந்துக்கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனவும் எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார். twin

No comments

Powered by Blogger.