Header Ads



ரணில் பதவியேற்று 5 மாதங்கள் நிறைவடைந்திருந்தாலும், இதுவரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை


புதிய அரசியல் கூட்டணி தொடர்பான தகவல்கள் அடுத்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


கூட்டணியை அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.


வடக்கு, கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தாம் தீர்மானித்துள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது முன்னெடுத்துள்ள போதிலும், நாட்டு மக்களின் உரிமையை பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தேர்தல் தொடர்பான விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் தேர்தலை பிற்போட அரசாங்கம் அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுக்காது எனவும் அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அதனை தாம் எதிர்பார்ப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


மேலும், ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்று 5 மாதங்கள் நிறைவடைந்திருந்தாலும் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு இதுவரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். tw

1 comment:

  1. நீங்களும் உங்களைப் போன்றவர்களும் சேர்ந்து நாட்டைக் காபாஸினா பண்ணி சுரண்ட முடியுமானவற்றை 75 வருடங்காளாக முழுமையாகச் சுரண்டி வெற்றுத் திறைசேரியை ரணிலிடம் ஒப்படடைத்துவிட்டு மாதங்களில் நாட்​டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்றால் அந்த வியூகத்தை ஞானக்காவிடம் கொடுத்திருந்தால் இதைவிடச் சிறப்பாக செய்து முடித்திருப்பார். ரணில் அவரின் சொந்த முயற்சியால் பஞ்சப்பிராணி வரிசைகளை இல்லாமலாக்கினார். குறைந்தபட்சமாவது கேஸ், எரிபொருளை வழங்கினார். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் வரிசைகளில் அநியாயமாக மரணிப்பதை ரணில் தடுத்தார். அந்த அளவாவது உங்களால் செய்யமுடியுமா? ஒருபோதும் முடியாது. வெறுமனே வீணப்போன பூருவன்ஸ, அவுஸ்ரேலிய நபரின் கோடான கோடியைச் சுருட்டிய கள்ளக்கூட்டத்தை வைத்துக் கொண்டு உங்களால் ஏதாவது சாதிக்க முடிந்ததா? இரவும் பகலும் மஹிந்தவுக்குப் பாட்டுப்பாடிவிட்டு அடிமுடிகள் குறைந்தபோது பிரிந்து சென்றதாக மங்களுக்கு நாடகம் காட்டினீர்கள். நீங்கள் செய்தது அவ்வளவுதான். இந்த கிளட்டு வயதில் அர சியலை இளைஞர்கள் செய்யட்டும் என வீட்டுக்கு முடங்கிக் கிடக்க முடியுமானால் அது தான் நீங்கள் இந்த நாட்டு மக்களுக்குச் செய்யும் பெரிய சேவை என்பதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.