Header Ads



சர்வதேச T20: துடுப்பாட்ட, பந்துவீச்சாளர் வீரர்களுக்கான தரப்படுத்தல் வெளியாகியது


சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை பிடித்துள்ளார்.


நடைபெற்று முடிந்த T20 உலகக்கிண்ண தொடரில் வௌிப்படுத்திய திறமைகளுக்கு அமைய, அவர் இந்த பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.


பாகிஸ்தான் அணியின் மொஹமட் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ளனர்.


இந்த தரப்படுத்தலில் இலங்கையின் பத்தும் நிஸங்க 10 ஆவது இடத்தில் நீடிக்கிறார்.


இதேவேளை, T20 பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கையின் வனிந்து ஹசரங்க தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.


ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் இரண்டாவது இடத்திலும் இங்கிலாந்தின் ஆதில் ரஷீத் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

No comments

Powered by Blogger.