Header Ads



குர்ஆன் வசனங்களை ஓதி, துஆவுடன் விளையாடத் துவங்கும் Musut Ozil ற்காக கத்தாரில் ஒலித்த குரல்


அட்டாக்கிங் மிட்ஃபீல்டராக விளையாடும் ஒரு ஜெர்மன் தொழில்முறை கால்பந்து வீரர் Musut Ozil, தனது தொழில்நுட்ப திறன்கள், படைப்பாற்றல், தேர்ச்சி திறன் மற்றும் பார்வை ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார் 

அவர் வைட் மிட்ஃபீல்டராகவும் விளையாட முடியும்.

அவரின் முன்னோர்கள் துருக்கியைச் சேர்ந்த முஸ்லிம்கள் 

சிறந்த மார்க்கப் பற்றாளர்

 தொழுகையைப் பேணுபவர்


 குர்ஆன் வசனங்களை ஓதி துஆ வுடன் தான் விளையாடத் துவங்குவார்


ஜெர்மன் பல கால்பந்து போட்டிகளில் வெற்றிக்குக் காரணமானவர்


அதிகம் ஊதியம் பெறும் வீரர்களில் அவரும் ஒருவர்


ஆனாலும் அவருடைய அணியில் அவருக்கு உரிய மரியாதை கிடைக்க வில்லை. 


சங்கிகளைப் போல இனவெறி பிடித்தவர்கள் ஜெர்மன் தோல்வியடையும் போதெல்லாம் அவரை கரித்துக் கொட்டினர்.


அணியில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை 


 இவை மிகவும் அதிகமானதால் மனம் வெறுத்து " வெற்றிபெற்றால் நான் ஜெர்மனியன், தோல்வியடைந்தால் நான் வந்தேறியா? எனக் கூறி ஜெர்மன் கால்பந்து அணியிலிருந்து வெளியேறினார்.


அவருக்கேற்பட்ட அநீதியைக் கண்டித்து கத்தார் மைதானத்தில் ஜெர்மன், ஸ்பெயினுடன் விளையாடும்போது ஜெர்மனுக்கு எதிர்ப்புக் காட்டும் விதமாக வாயில் துணியைக் கட்டிக் கொண்டு அவரின் புகைப்படத்தை அவரின் ஆதரவாளர்கள் உயர்த்திப் பிடித்தனர்.

-----கணியூர் நாஜி




No comments

Powered by Blogger.