ஐஸ் எடுத்தவர்களுக்கு ஏற்படும் கதி - ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள விடயம்
ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டினால் மனநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக மனநோய் சிறப்பு மருத்துவர் டொக்டர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களையும் இளைஞர் சமூகத்தையும் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே மனநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ரூமி ரூபன் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இன்றைய சமூகத்தில் மனநோய்க்கும் ஐஸ் என்ற போதைபொருள் தெளிவான தொடர்பு இருக்கிறது. கேட்டால் ஐஸ் எடுத்தவர் என்கிறார்கள். இறுதியில் இவர்களுக்கு ஐஸ் போதைபொருளுளால் பல்வேறு மனநோய்களுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பாடசாலை மாணவர்களை குறிப்பாக இளம் தலைமுறையினரை இந்த ஐஸ் போதைபொருள் அழிக்கும் வகையில் காணப்படுகின்றது. இது இன்று இலங்கையில் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்´´ என்று கூறினார்.
பாடசாலை மாணவர்கள் மீது பெற்றோரின் கவனக்குறைவு சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு தூண்டுவதற்கு உதவியுள்ளதாக மனநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ரூமி ரூபன் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment