Header Ads

தொழில்களை கைவிட்டு வந்த எமக்கு நாமல், கோட்டாயவினால் ஏற்பட்ட கதி


 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் பயணம் பாதிப்படைய நாமல் ராஜபக்ச உள்ளடங்களாக அவரின் குடும்பத்தில் சிலரே காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது சன்ன ஜயசுமன மேலும் கூறுகையில்,


கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வருவதற்கு நாங்களே பாடுபட்டோம். நாங்கள் பல்கலைக்கழகங்களில் பதவிகளையும் எங்களின் தொழில்களையும் கைவிட்டு வந்தே கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினோம்.


அவர் நாங்கள் கூறுவதை போன்று வேலை செய்வார். நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வார் என்றே நினைத்தோம். அதன்படி முதல் சில மாதங்களுக்கு அவர் அவ்வாறு வேலை செய்தார். ஆனால் சில மாதங்களின் பின்னர் அவர் நாங்கள் கூறுவதை கேட்கவில்லை.


குறைந்தது மகிந்த ராஜபக்ச கூறுவதைக் கூட கோட்டாய ராஜபக்ச கணக்கில் எடுக்கவில்லை. அவர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அவரின் குடும்பத்தில் சிலர் கூறியவற்றையே கேட்டார்.


இதன்படி நாமல் ராஜபக்ச கூறுவதைப் போல வேலை செய்யப் போனதினாலேயே அவர் குழப்பிக் கொண்டார். நாங்கள் கூறியவாறு வேலை செய்திருந்தால் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்.


ஆனால் இப்போது எங்களின் தோள்களில் இந்த பாவங்களை சுமத்துவதற்கு நாமல் ராஜபக்ச முயற்சிக்கின்றார். அவர் அனைத்து பாவங்களையும் செய்துவிட்டு அந்தப் பாவங்களை கழுவ முடியாது.


நாமல் ராஜபக்ச வழங்கிய தவறான ஆலோசனைகளினாலேயே முழு நாடும் இப்படி துன்பப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.    

1 comment:

  1. சனா, உன்னை எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உள் வட்டங்களுக்குள் நுழைந்து ஒரு மாயக்காற்றைப் போல அரசியல் பிரபலமடைய உங்களை வழிநடத்தினீர்கள். மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தி தொடர்பான தொழில்துறை விஷயங்களில் உங்களுக்கு சுதந்திரம் உங்களுக்கு கொடுக்கப்பட்டதது . கோட்டாபயவின் நிழலில் நீங்கள் அதைச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். கொள்கையைப் பின்பற்றாமல் உங்கள் நண்பர்களுக்கு உதவி செய்தீர்கள் என்று மருந்துத் துறையில் வதந்தி பரவுகிறது. கோத்தா பிரச்சனையில் இருந்த போது கரடி மற்றும் இரண்டு நண்பர்களின் கதையில் வருவது போல் கோட்டாபயவை கைவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக உங்களின் பெருமைக்கு பின்னால் சென்றீர்கள். கடைசியில் எங்கே முடிந்தது. உங்கள் திட்டங்கள் அனைத்தும் பலனளிக்கவில்லை. ரணில் ஜனாதிபதியானார், பசிலின் உதவியுடனும், SLPP ஆதரவுடனும் ரணிலுக்கு உந்து சக்தியாக கோட்டா உள்ளார். உங்கள் ஈகோவைத் தணிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிடாதீர்கள். இறந்து போனது போல் நடித்து தனது உயிரைக் காப்பாற்றி கடைசியில் தனது உயிரைக் காப்பாற்றிய நண்பருக்குக் கரடி வழங்கிய அறிவுரையைப் போன்றே கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் சிறந்த அறிவுரை கிடைத்துள்ளது.
    நூர் நிசாம் (Noor Nizam) - அமைதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆய்வாளர், SLFP/SLPP ஸ்டால்வர்ட், "முஸ்லிம் குரல்" அழைப்பாளர், தேசப்பற்றுள்ள குடிமகன்.
    English:
    Chana, I know you very well. You got into the inner circles of President Gotabaya Rajapaksa and steered yourselve into political popularity like a mirage. You had received a free hand in Indsutrial matters concerning Medical material and Pharmaseutical production. You made the best of it under the shadow of Gotabaya. You helped your friends without following policy it is rumoured in the pharmaseutical industry. When Gota was in trouble, just like in the story of the bear and the two friends you you deserted Gotabaya and went behind your glory for political gains. Where did it end at last. All your plans did not work. Ranil became the President and Gota is the driving force behind Ranil with Basil help and SLPP support. Do not make statements to stisfy your ego. Gotabaya Rajapaksa has got the best advice that the bear gave him similar to the advice given to the friend who saved his life pretending to be dea and finally saved his life.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice", Patriotic Citizen.

    ReplyDelete

Powered by Blogger.