Header Ads



இம்ரான் கான் மீது துப்பாக்கிப் பிரயோகம் - காயப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி


பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் காயம் அடைந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி இம்ரான் கான் பேரணி மேற்கொண்டு வருகிறார். அவருடன் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் பேரணியில் பங்கேற்று வருகிறார்கள். இந்த பேரணி இன்று வஜிராபாத் வந்தபோது, இம்ரான் கான் தனது பிரச்சார வாகனத்தின் உச்சியில் இருந்தார்.


அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவருடன் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களான ஃபைசல் ஜாவெத், அகமது சத்தா உள்பட 4 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.காயம் ஏற்பட்டதை அடுத்து இம்ரான் கான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


பேரணி, இஸ்லாமாபாத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இம்ரான் கானை கொல்ல வேண்டும் எனும் நோக்கில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது என பி.டி.ஐ கட்சி கண்டித்துள்ளது.


இம்ரான் கான் மீதான இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தனது பயணம் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க இருந்தார். இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக அவர் தனது செய்தியாளர் சந்திப்பை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2 comments:

  1. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நாங்கள் நேசிக்கிறோம். அவர் காயம்பட்டார் என்பதை அறியும்போது நம் இதயத்தில் இரத்தம் கொட்டுகிறது. அவர் காயங்களில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்துவோம், இன்ஷா அல்லாஹ். ஆனால், நவாஸ் குடும்பத்தினர் இந்த அரசியல் உள்நோக்கத்தின் பின்னணியில் இருந்தால் அல்லது பூட்டோ எதிர்ப்பாளர்களின் கை இருந்தால் நாங்கள் அவர்களை வெறுக்க மாட்டோம். பாகிஸ்தானியர்கள் நமது சகோதரர்கள், அவர்கள் நமது நாடுகளின் சிறந்த நண்பர்கள். பாகிஸ்தானின் உளவுத் துறையினர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு யார் காரணம் என்பதை உலகுக்குத் தெரிவிக்கும் என்று பாகிஸ்தானின் நல்ல மற்றும் நெருங்கிய நண்பராக இலங்கை நம்புகிறது.
    நூர் நிஜாம் (Noor Nizam) - அமைதி மற்றும் அரசியல் ஆர்வலர், அரசியல் தொடர்பு ஆய்வாளர், "தி முஸ்லீம் குரல்" அழைப்பாளர்.
    English:
    We love Imran Khan the former PM of Pakistan. It bleeds our hearts to learn that he was hurt. We wish him recovery from the wounds soon, Insha Allah. But we do not hate the Nawaz family if they are behind this politically motivated or the Bhutto opponents if they have had a hand. Pakistanis are our brethren and they are our countries best friends. Sri Lanka being a good and close friend of Pakistan hopes that the the intelligence services of Pakistan will find out the perpetrators and tell the world who is the cause for this shooting.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நாங்கள் விரும்புகிறோம். அவர் காயமுற்றார் என்பதை அறிந்துகொள்வது நம் இதயங்களில் இரத்தம் கசிகிறது. அவர் விரைவில் காயங்களில் இருந்து குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், இன்ஷா அல்லாஹ். ஆனால் நவாஸ் குடும்பம் அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த பின்னணியில் இருந்தால் அவர்களை நாங்கள் வெறுக்க மாட்டோம் அல்லது பூட்டோ எதிர்ப்பாளர்களுக்கு ஒரு கை இருந்தால் அவர்களை வெறுக்க மாட்டோம். பாகிஸ்தானியர்கள் நமது சகோதரர்கள், அவர்கள் நமது நாட்டின் சிறந்த நண்பர்கள். பாக்கிஸ்தானின் ஒரு நல்ல மற்றும் நெருங்கிய நண்பரான இலங்கை, பாக்கிஸ்தானின் புலனாய்வு சேவைகள் குற்றவாளிகளை கண்டுபிடித்து இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு யார் காரணம் என்பதை உலகிற்கு தெரிவிக்கும் என்று நம்புகிறது.
    நூர் நிஜாம் (Noor Nizam) - அமைதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆராய்ச்சியாளர், ஒருங்கிணைப்பாளர் "முஸ்லிம் குரல்".
    English:
    We love Imran Khan the former PM of Pakistan. It bleeds our hearts to learn that he was hurt. We wish him recovery from the wounds soon, Insha Allah. But we do not hate the Nawaz family if they are behind this politically motivated or the Bhutto opponents if they have had a hand. Pakistanis are our brethren and they are our countries best friends. Sri Lanka being a good and close friend of Pakistan hopes that the the intelligence services of Pakistan will find out the perpetrators and tell the world who is the cause for this shooting.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, Convener "The Muslim Voice".


    ReplyDelete

Powered by Blogger.