Header Ads



ஜனாதிபதி மாளிகைக்குள் கோட்டபாயவை போட்டுத்தள்ள திட்டம், இறுதி நிமிடத்தில் நிகழ்ந்தது என்ன..?


முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக நாடாளுமன்று உறுப்பினர் விமல் வீரவன்ச பரபரப்பு தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற மக்கள் புரட்சியின் போது போராட்டக்காரர்களால் கொலை செய்யும் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த போது, ​​கோட்டபாயவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டிருந்தது.


அதற்கு முன்னர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் காப்பாற்றுமாறு, தாம் இறைவனிடம் பிரார்த்தித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னணியில் கொலைக்கான சதித்திட்டம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அன்றையதினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழையும் வரை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய அது குறித்து அறிந்திருக்கவில்லை.


எனினும் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த பாதுகாப்புத் தலைவர் ஒருவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தவறான தகவலை அளித்து, நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை பார்த்தபோது, ​போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்ததைக் கோட்டபாய கண்டார். அந்தத் தருணத்திலேயே மாளிகையின் பாதுகாப்பு நிலைமை குறித்து அவர் அறிந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.