Header Ads



புதன்கிழமை போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் துரோகிகள்: வஜிர அபேவர்தன


நாளைய (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்களை துரோகிகளாகவே கருத வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


நாட்டின் பொருளாதார நெருக்கடியை சீர்குலைப்பதில் பங்கேற்பதால் நாளைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் துரோகிகளாகவே கருதப்பட வேண்டும் என ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.


“அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஓரளவிற்கு குறைக்கப்பட்டு, சுற்றுலாத் துறையின் வளர்ச்சியால் இலங்கை ஒருவித ஸ்திரத்தன்மையை அடைய முடிந்தது. இருப்பினும், இதுபோன்ற போராட்டங்களால் இந்த சாதனைகள் அனைத்தையும் நாடு இழக்க நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையை மேலும் சீர்குலைப்பதற்காக சில அரசியல் குழுக்கள் சில சர்வதேச சக்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளன.


“மக்கள் புத்திசாலித்தனமாகவும் அமைதியாகவும் பணியாற்றினால், ஒரு வருடத்தில் இலங்கை ஒருங்கிணைக்கப்படும்,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பாராளுமன்றத்தில் சனாதிபதிக்கு காக்கா பிடிக்கும் இந்த மந்தி(ரி) மாத்திரம் தான் இத்தகைய கபுடாஸ் பாராட்டுக்களைத் தெரிவிப்பது மற்றுமொறு மந்தி(ரி)ப்பதவியை பெற்றுக் கொள்வதற்குத் தான் என அரசியலில் பலரும் பேசிக் கொள்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.