Header Ads



என்னை ஏமாற்ற முயற்சிக்காதீர்கள்


சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருப்பது வேலைப் பளுவினை இலகுபடுத்துவதற்காக வேண்டி அன்று வேலை செய்யாமல் இருப்பதற்கு அல்ல. சுற்றறிக்கைகளுக்கு அடிமையாகி தன்னை. ஏமாற்ற செயற்பட வேண்டாம் என நகர  அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். அவர் இக் கருத்தின் மூலம்.எடுத்துரைப்பதாவது சில அரச அதிகாரிகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதனை தாமதிப்பதற்காக  சுற்றறிக்கைகளைக் காரணம் காட்டிக் கொள்கின்றனர்.


"நபர் ஒருவரின்  நியாயமான கோரிக்கை ஒன்று வந்ததும்  நீங்கள் இல்லை, முடியாது எனக் கூற வேண்டாம். அதை எப்படி சட்ட ரீதியாக நிறைவேற்றக் கூடிய முறை ஒன்றைக் கூறுங்கள்.  அந்த இல்லை, முடியாது என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை"  என்றும் அமைச்சர் கூறினார்.


நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பட்ஜெட் மற்றும் ஏனைய  நடவடிக்கைகள் சம்பந்தமாக நேற்று (15) அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் இராஜாங்க அமைச்சர்களான தேனுக விதானகமகே மற்றும்  அருந்திக பெர்னாண்டோ ஆகியோர்களின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.


இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியதாவது:


"எமக்கு எல்லா நேரத்திலும் வரலாற்றைக் குறை கூறிக் கொண்டிருக்க  முடியாது. நிகழ்காலத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டு எதிர்காலத்தை திட்டமிட வேண்டும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சு என்பது நாட்டின் அபிவிருத்தி தொடர்பான பிரதான பங்கினை ஆற்றும் அமைச்சு ஆகும். குறிப்பாக நாட்டு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு நேரடியான தீர்வுகள் வழங்க வேண்டிய அமைச்சாகும்.  கடந்த காலங்களில் கோவிட்   தொற்றுநோய் காரணமாக தற்போதைய எமது நாட்டில் இருக்கும்  பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் வீட்டுக்கடன் மற்றும் உதவித் திட்டங்கள் மேலும், வீட்டுத் திட்டங்களில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை  முன்வைத்துள்ள பட்ஜெட்டே இது. இதனூடாக முதன்மையான கவனம் செலுத்தப்பட்டிருப்பது இந்த நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது என்பதை நாம் பார்க்க வேண்டும்.  அந்த நிகழ்ச்சித்  திட்டத்திற்குள் நகர  அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சிற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்பும்   இலக்கை அடைவதற்காக வேண்டி நாம் டொலர்களுக்கு வீடுகளை விற்பனை செய்யும் வேலைத் திட்டம், அபிவிருத்தி விண்ணப்பங்களை விரைவாக அனுமதிப்பதற்கான One Stop Unit  நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். மேலும் மேலும்  புதிய திட்டங்களை கண்டறிந்து எதிர்காலத்தில் அந்த திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும்.


கடந்த காலத்தில், வீட்டுக் கடன், உதவித் திட்டங்கள் மற்றும் சில வீடமைப்புத் திட்டங்களும் சில அபிவிருத்தித் திட்டங்களும் முறையான திட்டமிடல் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   சில திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பது அதிகாரிகள் விரும்பியபடி. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை பூர்த்தி செய்வதற்குப்  பதிலாக, மேலும் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை நடைமுறையிலுள்ள கடன்கள், மானியங்கள், திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் முடியும் வரை மேலும் கடன் மற்றும் உதவித் திட்டங்களைத் தொடங்கக் கூடாது.


சில அதிகாரிகளின் பிழையான செயற்பாடுகள் காரணமாக அரசியல்வாதிகளாகிய நாங்கள்தான் மக்களால் தூற்றப்படுகிறோம்.  "டை முடிச்சு" பிரச்சினையால் அதிகாரிகளுக்கு மத்தியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதுவும் இந்த அரசு நிறுவனங்களில் வேலை செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணம். பதவிப் பிரச்சினைகள்,  சீனியாரிட்டி பிரச்சினைகள் அல்லது பிற தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக அதிகாரிகள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை "டை முடிச்சு" பிரச்சனைகள் எனப்படும்.  இந்தப் பிரச்சனைகளால் நிறுவனங்களில்  நடைபெறும் வேலை தாமதிக்கப்படுவதனால் மக்கள்  குற்றம்  சாட்டுவது  அரசாங்கத்தை அல்லது அமைச்சரை. அதனால் "டை முடிச்சு" பிரச்சனைகள் காரணமாக பொதுமக்களின்  சேவையை தாமதப்படுத்த வேண்டாம். அமைச்சின் பணிகளை தாமதப்படுத்தாதீர்கள்.


"இராஜாங்க அமைச்சர்களான தேனுக விதானகமகே மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோர்களும் இங்கு உரையாற்றினார்கள்.


No comments

Powered by Blogger.