Header Ads22வது ஆண்டில் கால் பதிக்கும், மல்வானை கல்வி முன்னேற்றக் கழகம் (EPO)


இன்றைய தினம் மல்வானை கல்வி முன்னேற்றக் கழகம் (EPO) தனது 21வது ஆண்டை பூர்த்தி செய்து 22வது ஆண்டில் வெற்றிகரமாக கல்விப் பணியில் காலடி வைக்கிறது. 


இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கல்வி முன்னேற்றக் கழகத்தின் கல்விச் சேவைப் பயணத்தில் எம்மோடு தோளோடு தோளாக நின்று எமது கல்விப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவும், ஒத்துழைப்பும் தந்து வரும் மல்வானை மக்களுக்கு முதற்கண் எமது கழகத்தின் மனமார்ந்த நன்றிகள்.

 

மல்வானை மக்கள் எனும் போது மல்வானையின் கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், துறைசார்ந்தோர், வியாபாரப் பிரமுகர்கள், மஸ்ஜித்கள், உலமாக்கள், கழகங்கள், சங்கங்கள், பாடசாலை நிர்வாகங்கள் அனைவரும் அடங்குவர்.


ஒழுக்க மாண்புகளுடன் கூடிய கல்விப் பரம்பரையொன்றை உருவாக்கும் நோக்கில் இளைஞர் குழாம் ஒன்றினால் சிறியதாக உருவாக்கப்பட்ட கல்வி முன்னேற்றக் கழகம் இன்று  பல அங்கத்தவர்களுடன் ஆலமர விருட்சமாக விரிந்து நின்று கல்விப் பரம்பரைக்கு நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.


ஆரம்பத்தில் ஊர்மட்டத்தில் கல்விசார் பணிகளை மேற்கொண்ட கல்வி முன்னேற்றக் கழகம்(EPO) காலத்தின் தேவைக்கேற்ப தேசியரீதியான கல்வித் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.


மல்வானை வரலாற்றில் மாணவர்களின் கல்வி, ஒழுக்க மேம்பாடுகளை மட்டும் இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இளைஞர் அமைப்பு கல்வி முன்னேற்றக் கழகம் *(EPO) ஆகும். 


கல்வி முன்னேற்றக் கழகத்தின் உருவாக்கத்தை தொடர்ந்து மல்வானையில் மாணவர்கள், பெற்றோர்கள், ஊரார்கள் மத்தியில் ஏற்பட்ட கல்வி தொடர்பான விழிப்புணர்வின் சிறந்த விளைவுகளை மாணவர்கள் கல்விமட்ட அடைவுகள், மாணவர்களின் கல்விச் சாதனைகள் மூலம் நாம் இன்னும் கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது.


அதற்கு மிகச் சிறந்த உதாரணம் வருடாந்தம் நாம் நடாத்தி வந்த சாதாரண தர மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சை.


 இலங்கை அரசால்

தேசியரீதியாக நடாத்தப்படும்  சாதாரண தரப் பரீட்சை முறைக்கு இணையாக அதனை ஒத்த முறையிலேயே நடாத்தப்பட்ட இப்பரீட்சையானது கல்வி முன்னேற்றக் கழகத்தின்(EPO) பெயரை மட்டுமல்லாமல் மல்வானை எனும் பெயரையும் தேசியளவில் எடுத்துச் சென்றுள்ளது.


நாட்டில் நிகழ்ந்த சில அசம்பாவிதங்கள்,மற்றும் கொரோனா காரணமாக இக்கல்விசார் பாரிய வேலைத்திட்டத்திற்கு தடைகள் வந்தாலும்  இன்றும் தேசிய அளவிலான இலங்கையின் முன்னணி பாடசாலைகள் குறித்த வேலைத்திட்டத்தை தமது பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்தி தருமாறு வருடா வருடம் எமது கழகத்திடம் வேண்டுகோள் விடுத்துக்கொண்டேயிருக்கின்றன. எல்லாப் புகழும் இறைவனுக்கே.


எமது வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு, சிறந்த அடைவுகளுக்கு இதுவே மிகப் பெரும் சான்றாக இருந்து வருகிறது.


கல்வி சார் வேலைத்திட்டங்கள் மட்டுமல்லாமல் காலத்தின் தேவைக்கேற்ப கல்வி முன்னேற்றக் கழகத்தின் பணிகள் விரிவுபடுத்தப்பட்டே வந்துள்ளன.


அந்த வகையில் மல்வானை மண்ணில் பெண்களுக்கென்றே பிரத்தியேகமான தையல் பயிற்சிகள் முதலில் ஆரம்பிக்கப்பட்டது கல்வி முன்னேற்றக் கழத்தால் என்பதும் வரலாறு. 


அத்துடன் நின்றுவிடாமல் எமது தையல் பயிற்சி வகுப்புக்களில் பயிற்சி பெற்றவர்களின் ஆக்கங்களை, திறமைகளை முழு ஊருக்கும் வெளிப்படுத்தும் வண்ணம் மாபெரும் தையல் கண்காட்சி நடாத்தப்பட்டதும் மல்வானையில் அது தான் முதல் தடவை.


 இப்போது அல் முபாரக் பாடசாலையின் கல்வி மற்றும் ஏனைய வேலைத்திட்டங்களுக்கு பெரும் உறுதுணையாக இருந்து வரும் பழைய மாணவர்கள் சங்கம் AL - MUBARAK (OBA) என்ற ஒழுங்கை எமது பாடசாலையிலும் ஆரம்பிக்க, இஸ்தாபிக்க கல்வி முன்னேற்றக் கழகம்(EPO) முன்னின்று செயற்பட்டு, பங்களிப்பு செய்ததனை யாவரும் அறிவர்.


அது மட்டுமல்லாமல் 

��தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்குகள், மாதிரிப்பரீட்சைகள்,


��மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான ஊக்குவிப்பு வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள்.


 ��ஊரில் கல்வித் துறையில் சாதனை படைத்தோருக்கான கௌரவிப்பு நிகழ்வுகள்.


 ��சாதனை படைத்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள்.


��ஊரையே ஒன்றுபடுத்தி நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள்.


��சாதாரண தர மாணவர்களுக்கான வதிவிடப் பயிற்சி முகாம்கள்.


��மேலதிக வகுப்புக்கள்,இரவுநேர முன்மாதிரி குழு வகுப்புகள்,GAQ, BA வகுப்புக்கள்.


��பெண்களுக்கான தையல் வகுப்புக்கள்,மற்றும் கண்காட்சிகள்.


��சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மள்வானை மக்களின் பாரிய நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள்.


��ரமழான் காலத்தில் நடத்தப்பட்ட Radio Al Ihsan வானொலி நேரலை நிகழ்வுகள்.


��O/L இன் பின்னர் மாணவர்களுக்கான உயர்தரப் பிரிவிற்கான வழிகாட்டல் நிகழ்வுகள்.


��A/L இன் பின்னர் உயர் கல்விக்கான வழிகாட்டல் நிகழ்வுகள்.


��மாணவர் மத்தியில் ஆங்கிலக் கல்வியை விருத்தி செய்வதற்கான வகுப்புகள், வேலைத்திட்டங்கள்.


��மல்வானையில் கணனிக் கல்வியை அறிமுகம் செய்ய மல்வானை வரலாற்றில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட கணனி வகுப்புகள்.


��காலத்திற்குக் காலம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான உளவளத்துணை ஆலோசனை வழிகாட்டல்  நிகழ்வுகள்.


��மாணவர்களுக்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு சுற்றுலாக்கள்.


��எழுத்துத் துறையில் ஈடுபாடுள்ள மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் புத்தக வெளியீட்டு வைபங்களை ஏற்பாடு செய்து கொடுத்தல்.


��வெள்ள நிவாரணப் பணிகள்


மேலும் இலங்கையின் தேசியரீதியான அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பாடசாலைக்கு செய்து கொடுக்கப்பட்ட 1 மில்லியன் ரூபாய் அளவிலான நீர்ப்பாசன மற்றும் மலசலகூட வசதிகள் அமைக்கப்பட்டதனையும் நாம் இங்கு நினைவு கூற விரும்புகிறோம். அல்ஹம்துலில்லாஹ்


இவை போன்று கல்வி முன்னேற்றக் கழகம்(EPO) மல்வானை மண்ணுக்கு அறிமுகம் செய்து நடாத்திய ஏராளமான எண்ணிலடங்கா முன்னோடித் திட்டங்களை (Pioneer Projects) அடிக்கிக்கொண்டே போகலாம்.


இன்ஷா அல்லாஹ் நாம் இரண்டு தசாப்தங்களாக மேற்கொண்ட அனைத்து வேலைத்திட்டங்களும், எமது எதிர்கால வேலைத்திட்டங்களும் உள்ளடங்கிய ஒரு நினைவு மலரை (Magazine) விரைவில் வெளியிடவுள்ளோம்.


அந்த வகையில் கல்வி முன்னேற்றக் கழகம் (EPO) அண்மையில் ஆரம்பித்துள்ள தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டத்தை பாடசாலை மற்றும் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கங்களின் ஒத்துழைப்புடன் மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். 


எமது முன்னைய வேலைத்திட்டங்களைப் போலவே இதுவும் வெற்றியளிக்க உங்கள் அனைவரினதும் பெரும் ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம்.


இன்ஷாஅல்லாஹ் எதிர்காலங்களிலும் எமது இக்கல்விச் சேவைப் பணி தொடர ஊர் மக்களின் பிரார்த்தனைகளும், உதவியும், ஒத்துழைப்பும், ஆதரவும் எமக்கு இன்றியமையாதது.


மேலும் இத்தனை வருடங்களாக எமது கழகத்தை தொடர்ந்து நடாத்திச் செல்ல எமக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அஹதிய்யா நிறுவனத்தை எம்மால் மறந்துவிட முடியாது. அவர்களுக்கும் எங்கள் கழகத்தின் அங்கத்தவர்கள் சார்பாக எமது பிரத்தியேக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


21 வருட நீண்ட பயணம் இன்னும் நீணட தூரம் வெற்றியுடன் பயணிக்க இறையருளை யாசித்தவர்களாக...


கல்வி முன்னேற்றக் கழகம்,

அஹதிய்யா கட்டிடம்,

மல்வானை

Strive to gether

No comments

Powered by Blogger.