Header Ads



முஸ்லிம்களுக்கான பாதயாத்திரை, கொச்சிக்கடையில் சிறு கும்பலின் அச்சுறுத்தலால் நிறுத்தம் (வீடியோ)


- Ismathul Rahuman -


வடபுலத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு 32 வருடங்கள் நிரைவை முன்னிட்டு இருவர் நாச்சிக்குடாவில் இருந்து ஆரம்பித்த பாதயாத்திரை கொச்சிக்கடையில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது.


     1990 ம் ஆண்டு அக்டோபர் 26ம் திகதி வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் விரட்டியடிக்கப்பட்டனர். இதன் 32 வது வருடத்தை நிணைவுகூர்ந்து யாழ் கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா கிராமத்திலிருந்து இருவர் ஜனாதிபதிக்கு மகஜர் சமர்பிப்பதற்காக கடந்த அக்டோபர் 26ம்திகதி பாத யாத்திரையை ஆரம்பித்தனர்.


    இப்பாத யாத்திரை இன்று காலை நீர்கொழும்பு பெரியமுல்லையை வந்தடையும் போது அவர்களை வரவேற்று வழியனுப்ப நீர்கொழும்பு வாழ் யாழ் முஸ்லிம்கள் காத்திருந்தனர்.


   இந் நடை பவனியை கொச்சிக்கடை பொலிஸார் தடுத்து அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றதாக செய்தி வந்தது.


    இவ்தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த பாதயாத்திரை கொச்சிகக்கடை நகருக்க வந்தபோது ஒருகுழுவினர் எதிர்பு தெரிவித்தனர். நாட்டு நிலமை சீராகும் இவ்வேளையில் இவ்வாரான யாத்திரைகள் மூலம் மீண்டும் நெருக்கடிகள் ஆரம்பிக்கும் எனக்கூறி அவர்கள் பொலிஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.


 நடைபவனியில் வந்தவர்களின் உயிர் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அவர்களை பாதுகாப்பாக பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளோம். அவர்களுடன் கலந்துரையாடி அவர்களை பொலிஸ் ஜீப் மூலம் கொழும்புக்கு அழைத்துச் சென்று மகஜரை கையளிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.


     நாச்சிக்குடாவைச் சேர்ந்த ஹசன்குத்தூஸ் முஹம்மது ஹாமிம், ஜர்பிதீன் ஈஸா முஹிதீன் ஆகியோர்களே இந்த பாதயாத்திரையில் பங்கு கொண்டுள்ளனர்.


 கிளிநொச்சியிலிருந்த நீண்ட தூரம் எந்தப் பிரச்சிணையும் இன்றி பயணித்த இந்த நடை பவணி கொச்சிக்கடையில்  சிறு கும்பலின் அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டமை கவலைக்குரியது என ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


   வடமாகாணத்திற்கு  மீள் குடியேறியவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட இலலை. ஜனாதிபதி அவர்கள் ஆணைக்குழு அமைத்து எமக்கு நியாத்தை பெற்றுத்தர வேண்டும் என்றே மகஜரில் கோரியுள்ளதாக தெரியவருகின்றது.


     பாத யாத்திரை வந்த இருவரையும் பொலிஸார் வாகணத்தில் கொழும்புக்கு அழைத்துச் சென்றதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுடன் வந்த ஆதரவாளர்கள் கொச்சிக்க்கடை பொலிஸ் நிலையம் முன்பாக காத்து நிற்கின்றனர்.


No comments

Powered by Blogger.