Header Ads



இலங்கை குறித்து வெளியாகியுள்ள ஐ.நா.வின் எச்சரிக்கை


இலங்கையில் மோசமான உணவு நெருக்கடி குறித்து ஐக்கிய நாடுகள் சபை இன்று -08- மீண்டும் எச்சரித்துள்ளது.


அத்துடன் அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 3.4 மில்லியனாக இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.


இலங்கையில் உள்ள 22 மில்லியன் சனத்தொகையில் 1.7 மில்லியன் மக்களுக்கு உதவி தேவைப்படுவதாக கடந்த ஜூன் மாதம் ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் மதிப்பிட்டிருந்தன.


இந்தநிலையில் இன்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாட்டு அமைப்புக்களால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க 79 மில்லியன் டொலர்களை திரட்டியதாகவும், எனினும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக 70 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.


தொடர்ச்சியான இரண்டு பருவகாலங்களின் மோசமான அறுவடை, அந்நிய செலாவணி பற்றாக்குறை போன்ற காரணங்களால், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தெற்காசிய நாடான இலங்கையில் கடந்த ஆண்டு இந்த காலப்பகுதியில் 13.1 சதவீதமாக இருந்த வறுமை விகிதம் இந்த ஆண்டு 25.6 சதவீதமாக இரு மடங்காக அதிகரித்துள்ளது.

1 comment:

  1. ஐ.நா. சபையின் புள்ளிவிபரங்களும் தரவுகளும் இலங்கையில் உள்ள ஆட்சியாளர்களுக்கும் மகோடிஸ்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு இது பிரச்சினையே அல்ல. காலை எழும்பியவுடன் அடுத்த கொள்வனவில் எவ்வளவு கமிசன் அடிக்கலாம் என்பதையும் அதற்கான வழிவகைகளையும் அமைத்துக் கொள்ள முயற்சி செய்யும் போது அந்த நாள் முடிந்துவிடுகின்றது. இதுதான் பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான மந்தி(ரி) களின் பணி.

    ReplyDelete

Powered by Blogger.