Header Ads



இந்த அரசாங்கத்திற்கு இராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்தபடி, அமைச்சுகளை பெருக்கிக் கொள்ளும் திட்டமே உள்ளது


நாட்டின் வருமானத்தைப் பெருக்கும் வகையில் வரிக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றும்,அரசாக செலவழிக்கும் போது தேவையை இலக்காகக் கொண்டு செலவழிக்க வேண்டும் எனவும்,அந்த இலக்குகளை எட்டும் விதமாக அது அமையப்பெற வேண்டும் என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இவ்வாறானதொரு நிலையில் எமது நாட்டுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதே புதிய பிரவேசமாக அமையும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (8) தெரிவித்தார்.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் எவ்வளவு அழுத்தங்களும் அசௌகரியங்களும் இருந்தாலும் அதை குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றாலும்,இந்த அரசாங்கத்தில் சமூக பாதுகாப்பு திட்டமொன்று இல்லை எனவும்,ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்த வன்னம்  அமைச்சுகளை பெருக்கிக் கொள்ளும்  பாதுகாப்புத் திட்டமே அவர்களுக்கு உள்ளதாகவும்,தற்போது 38 இராஜாங்க அமைச்சர்கள் உள்ளதாகவும் மேலும் பலர் நியமிக்கப்படவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நாட்டை வங்குரோத்தடையச் செய்த நாமல் ராஜபக்ச பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பேரவைக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு,நாட்டின் கொள்கை முன்னுரிமைகளை உருவாக்குவதற்குத் தேவையான குறுகிய கால,மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது நகைப்புக்குரிய விடயம் என்றும்,நாட்டை அழித்த ராஜபக்சவிடமிருந்து தீர்வுகள் காண வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவர்கள் மக்களை ஏமாற்றிய வன்னம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


இது போன்ற அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ தயாராக இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டிநுவர தேர்தல் தொகுதிக் கூட்டம் இன்று (08) இடம் பெற்றது.இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டிநுவர தொகுதி அமைப்பாளர் கெமுனு அபயசுந்தர ஏற்பாடு செய்திருந்ததோடு, இதில் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


ரணசிங்க பிரேமதாஸ காலத்தில் இரண்டு உள்ளக கிளர்ச்சிகள்,பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்ட போதும் பொருளாதாரச் சுருக்கம் ஏற்படவில்லை எனவும்,அவர் 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தைத் தொடங்கினார் எனவும்,அதற்கான விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், தற்போதைய நாட்டின் வருமானம் ஆடைத் தொழிலால் தீர்மானிக்கப்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அகால மரணமடையாமல் இருந்திருந்தால் 500க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு எமது நாடு முன்னோக்கிச் சென்று இருக்கும் எனவும் தெரிவித்தார்.


அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப்பட்ட எதையும் இந்த அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்துவதாக இல்லை எனவும், அவர்கள் தங்களுக்கு நன்மை பயக்கும் பகுதியை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள் எனவும்,சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் பிரகாரம் உள்ளன எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களிடம் பொய் சொல்லாமல் 2.9 பில்லியன் டொலர்களை எமது நாட்டிற்கு பெறத் தேவையான ஆதரவை கேட்டால் அதை வழங்குவதாகவும்,அப்படி இல்லாமல், நாட்டுக்கு பொய் சொல்லி,எங்களிடம் உதவி கேட்டால்,அதற்கு எவ்விதத்திலும் சம்மதிக்கவே மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.