Header Ads



பிரசன்ன ரணதுங்கவின் சூடான பதில்


போராட்டக்காரர்கள் வீடுகளுக்கு தீ வைத்து, மக்களைக் கொல்ல வந்தால், அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அடித்துக் கொன்று அரசாங்கத்தை கவிழ்ப்பதை அனுமதிக்க முடியாது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (31) தெரிவித்தார்.

அமைதியான போராட்டங்களை எந்த நேரத்திலும் செவிசாய்க்க அரசு தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.


இன்று (31) கோட்டே பெத்தகான ஈரநில பூங்காவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் மேலும் பதில் பதிலளித்தார்


கேள்வி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மீண்டும் புத்துயிர் பெறும் முயற்சியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்துள்ளார்.


பதில் - அவர் தனது மகனை கட்சிக்கு அழைத்து வரும் திட்டத்தில் இருக்கிறார். அவர் காலத்தில்தான் நாடு அதிக கடன் வாங்கியது. அதை மறைப்பதற்காகவே பல விடயங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இந்த சவால்களை சமாளிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.


கேள்வி - எதிர்வரும் தேர்தலில் மொட்டுக் கட்சி வெற்றி பெறுவது சாத்தியமா?


பதில் - மொட்டுக் கட்சி மிகவும் பலம் வாய்ந்த அரசியல் கட்சி. நாளை தேர்தல் வந்தாலும் பலமாக நிற்க முடியும்.


கேள்வி - ஆனால் கட்சி இரண்டு மூன்று துண்டுகளாக உடைந்து கிடக்கிறது, இல்லையா? குறிப்பாக டலஸ் அழகப்பெருமவின் தரப்பினர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


பதில் - சக்தி அதிகரிக்கும் போது கட்டுப்படுத்த முடியாது. அவர்களிடம் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளது. நியாயமான விமர்சனங்களை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால் நாடு எதிர்கொள்ளும் இந்த சவால்களை எதிர்கொள்ள யாரும் முன்வரவில்லை. சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது. சவால்களை ஏற்கும் தலைவனுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த சவாலை ஏற்றுக்கொண்ட தலைவருக்காக கட்சி சில தியாகங்களை செய்துள்ளது.


கேள்வி - அதாவது அடக்குமுறையைக் கையாளுவீர்கள் என்று சொல்கிறீர்களா? - ஆனால் நீங்கள் யானையை பலப்படுத்துகிறீர்கள் என்பதே குற்றச்சாட்டு?


பதில் - யானை ஒன்றுதான் பாராளுமன்றத்தில் உள்ளது. கட்சியை பலப்படுத்த ஜனாதிபதி முயற்சிக்கவில்லை. அடுத்தவரை விமர்சிக்காமல் கட்சியை எப்படிக் கட்டியெழுப்ப வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


கேள்வி - எதிர்வரும் இரண்டாம் திகதி கொழும்பில் சுற்றி வளைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


பதில் - அமைதியான மற்றும் நியாயமான போராட்டங்களை நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் அடித்துக் கொன்று ஆட்சியைக் கைப்பற்ற அனுமதிக்க முடியாது.


கேள்வி - அதாவது அடக்குமுறையைக் கையாளுவீர்கள் என்று சொல்கிறீர்களா?


பதில் - அடக்குமுறையால் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறேன். அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம். நாட்டின் எதிர்காலத்திற்கு தயாராக வேண்டிய நேரம் இது. மக்களை கொல்வதும், வீடுகளுக்கு தீ வைப்பதும் நியாயமா? அவர்களை நியாயப்படுத்த முடியுமா? மக்களைக் கொல்வதன் மூலமும், வீடுகளுக்குத் தீ வைப்பதன் மூலமும் அரசாங்கங்களை கவிழ்ப்பதை அனுமதிக்க முடியாது

No comments

Powered by Blogger.