Header Ads

இலங்கைப் பெண் நியூசிலாந்தில் முடி சூட்டப்பட்டார்


இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க (நிஷி) 2022 ஆம் ஆண்டுக்கான Mrs. Woman of the Universe நியூசிலாந்தில் முடிசூட்டப்பட்டுள்ளார்.


இது குறித்து நிஷி ரணதுங்க வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “Mrs. Universe New Zealand அமைப்பின் தலைவர் மற்றும் பிரபல ஜூரிகள் குழுவின் ஒப்புதலுடன், Mrs. Universe New Zealand அமைப்பான National Directness Anna Marie Parrant அவர்களால் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


அவரது வெற்றியைத் தொடர்ந்து, நிஷி ரணதுங்க, நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச மேடையான ‘Woman of the Universe 2023’ இல் Mrs. Woman of the Universe நியூசிலாந்தின் பெயரைப் பெறுவார்.


இந்நிலையில், தம்மை ஊக்குவித்து, வழிநடத்தி, சந்தர்ப்பம் வழங்கியதற்காகவும், நிகழ்வின் அனைத்து நடுவர்கள் மற்றும் அனுசரணை வழங்குபவர்களுக்கும் மிஸஸ் யுனிவர்ஸ் நியூசிலாந்து அமைப்பான நேஷனல் டைரக்ட்னஸ் அன்னா மேரி பரன்ட் அவர்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக நிஷி தெரிவித்துள்ளார்.


"பல ஆண்டுகளாக எனது போட்டிப் பயணத்தில் தனக்கு உதவிய மற்றும் ஆதரவளித்த எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் சமூக ஆதரவாளர்களுக்கு மிக்க நன்றி," என்று அவர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.