Header Ads



எனக்கெதிராக விசாரணை மேற்கொள்ள முடியாது


சட்டவிரோதமான முறையில் 75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை சம்பாதித்ததாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீது விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சார்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் முதல் கட்டமாக ஆட்சேபனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அரச அதிகாரிகளுக்கு மாத்திரமே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கமுடியும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.


அமைச்சர்களுக்கோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கக முடியாது என சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.


சட்டத்தரணிகளின் கருத்துக்களை ஆராயந்த நீதிமன்றம் வழக்கினை எதிர்வரும் 28 ஆம்  திகதி வரை ஒத்தி வரை ஒத்திவைத்துள்ளது.


1 comment:

  1. அத்தனை சட்டவிரோதச் செயல்களையும் செய்து, பொதுமக்களின் பணத்தைச் சூறையாடி, கிடைத்த வௌிநாட்டு உதவித் தொகைகளை சாக்கில் போட்டுக் கொண்டு இவனுடைய அடிவருடிகளுக்கும் உறவினர்களுக்கும் அரசின் சலுகை என்ற பெயரில் சட்டவிரோதமாக கோடான கோடி பொதுநிதிகளை வாரிஇறைத்து கோடிஸ்வரனாக வாழும் இந்த பூருவன்ஸவை 1000 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு களவாடிய பொதுச் சொத்தை திரும்பப் பெறும் ஒரு திட்டத்தையும் நீதிமன்றம் செயல்படுத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.