Header Ads



நாங்கள் ரணிலை கட்டுப்படுத்த முயற்சித்தால், அதுதான் அரசாங்கத்தின் அழிவாக இருக்கும்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுவதை செய்யும் நபர் அல்ல என அந்த கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


ரணில் விக்ரமசிங்கவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்படுத்த முயற்சித்தால், அது அரசாங்கத்தின் அழிவாக அமைந்து விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.


நெருக்கடியில் இருந்து மீளவே நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். இரண்டு வருடங்களுக்கு அவர் பணியாற்ற தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.


மறுபுறம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாங்கள் கூறுவதை கேட்க மாட்டார். எனினும் எங்களுடன் ஒத்துழைப்புடன் வேலை செய்கிறார். அவர் அனுபவமுள்ள அரசியல்வாதி. முன்னாள் பிரதமர்.


நாங்கள் அவரை கட்டுப்படுத்தும் அளவுக்கு அவர் முட்டாள் அல்ல. நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்து, அவரை கட்டுப்படுத்த முயற்சித்தால், அதுதான் அரசாங்கத்தின் அழிவாக இருக்கும் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் கூறியுள்ளார்.

1 comment:

  1. பேச்சுக்கும் செயலுக்குமிடையில் மலைக்கும் மடுவுக்குமிடையிலான வேறுபாடு இந்த மஹிந்தானந்த என்ற நபரிடம் தெரிகிறது. பலமுறை தெரிவித்த கருத்துக்கள் தீவிரமாக மூளைக் கோளாரால் பாதிக்கப்பட்ட நோயாளியின் நோய் அறிகுறிகள் தௌிவாக இருக்கின்றன. இத்தகைய நோயால் பாதிக்கப்ட்ட நோயாளிகள் வாயுலறுவது இந்த நாட்டு மக்களையும் அந்த வகையான நோயுக்கு இட்டுச் செல்லும். எனவே ஏதாவது ஒரு பொது நிறுவனம் இந்த நோயாளியைப் பிடித்து அங்கொட மனநோயாளர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தால் குறைந்தது தற்காலிகமாகவேனும் இந்த நாட்டில் பொதுமக்களை மனநோயில் இருந்து காப்பாற்றலாம்.

    ReplyDelete

Powered by Blogger.