Header Ads



ரமளான் பரிசு மழை போட்டியில் வெற்றியீட்டியவர்கள் விபரமும், பரிசு வழங்கும் வைபவமும் (படங்கள்)


அமீஸ் நிறுவனம் மற்றும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் இணைந்து, இவ்வருடம் புனித ரமழான் மாதத்தில் நடத்திய ரமளான் பரிசு மலை போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியீட்டியவர்களுக்கான,   பரிசு வழங்கும் நிகழ்வு 11.10.2022ஆம் திகதி கொழும்பு அமீஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கௌரவ பணிப்பாளர் அல்ஹாஜ் இப்ராஹீம் அன்சார்  கலந்து கொண்டார். 

பரிசு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் இப்ராஹீம் அன்சார் அவர்களையும், அமீஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸீம் அவர்களையும்,  நிறுவனத்தின் நிறைவேற்றுப்  பணிப்பாளர் எம்.ஜே வாரித் அவர்களையும் வை.எம்.எம்.ஏ. அமைப்பின் தேசிய தலைவர் இஹ்சான்-ஏ-ஹமீத் அவர்களையும் அமீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் சட்டத்தரணி எம். எச் சித்தீக் அவர்களையும் படங்களில் காணலாம்.  

அத்துடன் இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் இப்ராஹீம் அன்சார் அவர்களை கௌரவித்து நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பெற்றுக் கொண்ட மற்றும் ஆறுதல் பரிசுகளை பெற்றுக் கொண்டவர்கள் விபரம்:


முதலாம் பரிசு  எம்.கே.எச்.பாஹீம்  துண்துவ பெந்தோட்டை

இரண்டாம் இடம்  சி.எம்.எப். சஹீகா ( நிந்தவூர்-12) – 

மூன்றாம் இடம் திருமதி. பதூனா மஹ்ரூப் (புதிய காத்தான் குடி-03) 


ஆறுதல் பரிசுகள்:

ஏ.ஏ.எப். சமீரா (கலாவெவ)

எம்.ஏ.எப். அகீலா (அக்குரணை) 

ஏ.ஏ.எம். பஸ்மி (பாலாவி)

ஏ.எல். அஸ்ஹர். (கெகுனுகொள்ள)

எஸ்.ஏ. அப்துல் ரஹ்மான். (பானந்துரை)

எம்.ஆர். ரிப்னா பானு. (பொல்கோள்ள)

எம்.ஆர்.பயாஸ் அஹ்மத் (வெலிகம)

















No comments

Powered by Blogger.