Header Ads



யாழ்ப்பாணத்தில் தோன்றிய சூரியக் கிரகணம் (படங்கள் இணைப்பு)


யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.27 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தென்பட்டுள்ளது.


யாழில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதனால் யாழின் பெரும்பாலான பாகங்களில் மழை முகில்கள் காணப்பட்டமையால் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியாத நிலைமை காணப்பட்டுள்ளது.


இருப்பினும் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை சிறிது நேரம் பார்வையிட முடிந்துள்ளது.


இதற்கமைய, யாழ்.அச்சுவேலி அக்கரை கடற்கரை பகுதியில் தென்பட்ட சூரிய கிரகணத்தின் புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.