Header Ads



அரச ஊழியர்கள் இனிமேல் இதைச் செய்ய வேண்டும் - பணமும் வழங்கப்படும்


தமது ஊழியர்களுக்கு , வாரத்தில் ஒரு நாள் துவிச்சக்கரவண்டியில் பணிக்கு வருவதற்கான விசேட திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது . 


எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை நினைவுகூரப்படும் ' உலக நகரங்கள் தினத்தை ' முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது . 


இதன் மூலம் , நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துவிச்சக்கர வண்டி மூலம் கடமைக்கு சமுகமளிக்க முடியும் . துவிச்சக்கரவண்டிகளை வாங்குவதற்கு நிதி மற்றும் அவற்றை பாதுகாப்பாக நிறுத்த இடம் ஒதுக்கீடு உட்பட துவிச்சக்கர வண்டியில் கடமைக்குச் செல்லத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தமது ஊழியர்களுக்கு செய்துகொடுக்கப்படும் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது . நகர அபிவிரு மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் , " துவிச்சக்கரவண்டி வெள்ளி - துவிச்சக்கரவண்டியில் வேலைக்கு வாருங்கள் " ( Cycle Friday - Come to work by bicycle ) என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பணம் நடைபெறவுள்ளது . பத்தரமுல்லை- செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது .

No comments

Powered by Blogger.