Header Ads



சுங்கப் பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, அரசின் தேவைகளுக்காக விடுவிப்பதற்குத் தீர்மானம்


பல்வேறு சட்ட காரணங்களுக்காக சுங்கப் பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, அரசின் தேவைகளுக்காக விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்கீழ் தற்போது கடுமையான வாகனப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பொலிஸ் உள்ளிட்ட திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.


அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நாட்டு மக்களின் சுபீட்சம் நல்ல எதிர்காலத்தை மாத்திரம் நம்பி மோசடியும் களவும், ஒரே நோக்கமாகக் கொண்ட ஆட்சியில் உள்ள கள்வர் கூட்டத்தை துரட்சி பண்ணும் நோக்குடன் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பைத் தெரிவித்த அரகலயில் ஈடுபட்ட இளைஞர்களை அநியாயமாகச் சிறையிலடைத்து அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை பலாத்காரமாகத் தடைசெய்து அட்டகாசத்தில் ஈடுபடும் அரசாங்கள் தற்போது வியாபாரிகள், அவசியத் தேவைகளுக்காக அவர்களுடைய பணத்தில் இறக்குமதி செய்த வாகனங்களை பல்வேறு காரணங்களைக்கூறி அவற்றை நிறைவேற்றுமாறு தற்காலிகமாக சுங்கப்பிரிவில் தடுத்துவைத்திருக்கும் தனிநபர்களுக்குச் சொந்தமான வாகனங்களை எப்படி அரசாங்கம் பயன்படுத்த முடியும். இது அடுத்த பயங்கர மனித அடிப்படை உரிமை மீறலாகும். உடனடியாக இதனால் பாதிக்கப்பட உள்ளவர்கள் சரியான சட்ட ஆலோசனைகளைப் பெற்று மேல்நீதிமன்றத்தில் வழக்குகளைப் பதிவு செய்து அவர்களுடைய சட்ட ரீதியான உரிமைகளை வேண்டிநின்றால் நிச்சியம் சட்டம் அவர்களுக்குக் கை கொடுக்கும். பாதிக்கப்பட்டவர்கள் தாமதிக்காது உடனடியாக அவர்களின் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியாகப் போராட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.