Header Ads



ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை


சதொச பணியாளர்களை கடந்த 2010 ஆம் ஆண்டு, அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி, 59 இலட்சம் ரூபாவுக்கு அதிகமாக அரசாங்கத்திற்கு பண இழப்பை ஏற்படுத்தியமைக்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ, மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


குறித்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.


அத்துடன், தலா ஒவ்வொருவரையும் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளிலும் செல்வதற்கு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.


மேலும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் கடவுச்சீட்டுக்களையும் கையகப்படுத்துமாறும், வெளிநாட்டு பயணங்களுக்கு தடைவிதித்தும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

1 comment:

  1. ஜோன்ஸ்டன் பெர்நான்டோ ஒரு அப்பாவி. இன்னும் அவர் யார் என்பதை சட்டம் சரியாகப் புரியவில்லை. எப்போது உயர் நீதிமன்றம் அவரின் நிரபராதித்தன்மையை சரியாகப் புரி்நதுகொள்வாநோ அப்போது அவரும் முற்றிலும் விடுதலையாகிவிடுவார்.

    ReplyDelete

Powered by Blogger.