Header Adsஅடிமைகள் 12 பேரின் பெயர்கள், அமைச்சுப் பதவிகளுக்காக முன்மொழியப்பட்டுள்ளன - எதிர்க்கட்சித் தலைவர்


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவிகளுக்காக, சலுகைகளுக்காக எந்தக் கொள்கைகளையும் காட்டிக் கொடுக்கமாட்டேன் எனவும், முடியாட்சி தருவதாகச் சொன்னாலும் ராஜபக்சர்களுடன் சேர்ந்து நாட்டையோ,220 இலட்சம் மக்களையோ, கட்சியையோ காட்டிக்கொடுக்க மாட்டேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெஹியத்தகண்டியில் தெரிவித்தார்.


பல ஆண்டுகளுக்கு முன்பு,ஆபிரிக்காவின் ருவாண்டாவில் நடந்த பாரியதொரு பழங்குடிப் போர் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்கள் பலியாகினாலும்,இன்று ருவாண்டா ஆபிரிக்காவின் புதிய சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது எனவும்,அது இந்நாட்டில் போரில் இழந்த உயிர்களை விட பெரிய தொகை எனவும்,அவர்கள் அபிவிருத்தியில் நாளுக்கு நாள் முன்னேறி வந்தாலும்,எமது நாட்டில் யுத்தம் நிறைவடைந்து ஏறக்குறைய 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும்,இன்னமும் இனவாதம் மற்றும் மதவாதத்தின் அடிப்படையில் நாட்டை அழிக்கும் திட்டத்திற்கு ராஜபக்ச குடும்பம் நாட்டை இட்டுச் சென்றது எனவும்,அவ்வாறு வக்குரோத்தடையச் செய்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாமல் குமரருக்கு நாட்டைக் கட்டியெழுப்பும் குழுவொன்றிற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


வரலாறு நெடுக தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்ந்த நம் நாட்டு மக்களும் முன்னின்ற நாடும்,மொட்டு அரசாங்கத்தாலும் ராஜபக்ச குடும்பத்தாலும் வங்குரோத்தடையச் செய்யப்பட்டதாக அரசியல் வரலாற்றில் எழுதப்படும் எனவும், தற்போது,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ராஜபக்சர்கள் கைப்பாவையாக பாவித்து தமக்கு நெருக்கமாகவிருக்கும் நபர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


விவசாயிகள்,மீனவர்கள், பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் என சகலரையும் அவர்கள் சிரமத்திற்குள்ளாக்கினர் எனவும்,அடுத்த போகத்திற்குத் தேவையான உரங்களைக் வழங்குவதற்குக் கூட முடியாத நிலை உள்ளதாகவும்,இதுவரை 3 போகங்கள் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும்,69 இலட்சம் பேர் நியமித்த மொட்டு அரசாங்கம் வேண்டுமென்றே விவசாயிகளை அழித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


அமெரிக்கவின் செனட் சபையில் இது குறித்து அறிக்கையொன்று கூட தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், முதன் முறையாக மனித உரிமைகள் பேரவை கூட நமது நாட்டில் பொருளாதார உரிமைகள் அழிக்கப்படுவது குறித்து விவாதிக்கிறது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,சமூகத்தின் மிகச்சிறிய அலகிலுள்ள தனிமனிதன் முதல் தொழில் வல்லுநர்கள்,அரச ஊழியர்கள் உட்பட அனைவரினதும் பொருளாதாரத்தையும் ராஜபக்சர்கள் அழித்தனர் எனவும்,இதன் காரணமாக, மக்களின் போதிய உணவு மற்றும் கல்விக்கான உரிமைகள் கூட மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்தவாறு உரப் பிரச்சனையைத் தீர்க்க முயல்கின்றனர் எனவும்,ஒரு நிமிடமேனும் கூட விவசாயிகள் மீனவர்கள் அருகில் செல்லாது, தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அமைச்சர்கள் தமது சிறப்புரிமைகளை அதிகரித்து, மொட்டுக்கு அதிக அமைச்சுகளை வழங்கி தமது அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கே முயற்சிக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


இதுவரை எழு மூளைக் காகம் 38 இராஜாங்க அமைச்சர்களின் பெயர்களை வழங்கிய நிலையில்,ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான மேலும் 12 அடிமைகளின் பெயர்களை அமைச்சுப் பதவிகளுக்காக  முன்மொழியப்பட்டுள்ளன எனவும்,இதனூடாக மீண்டும் ஆட்சியைப் பெற முயற்சித்தாலும் மக்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனயே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


அமைச்சர்களின் பிள்ளைகள் கற்கும் அனைத்துப் பாடசாலைகளிலும்ஸ்மார்ட் வகுப்பறைத் திரைகள்,ஆங்கிலக் கல்வி என்பன அடிப்படையாக இருந்தாலும், நாட்டின் பிற மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் இதுபோன்ற வசதிகள் குறைந்தபட்சமே உள்ளன எனவும்,இது எதிர்காலத்தில் தொழிற் சந்தையை கூட பெரிதும் பாதித்துள்ளதாகவும்,நாட்டில் இவ்வாறான இடைவெளியை ஏற்படுத்தியிருந்தும் தேர்தலின் போது சிங்களவாதம், பௌத்தவாதம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிவருகின்றனர் எனவும்,நமது கல்வி முறையின் மூலம் உலகையே வெல்லக்கூடிய மாணவ தலைமுறையை உருவாக்க முடியும் எனவும்,அவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டால்,தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்து உலகையே வெற்றி கொள்ள முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.