தான் பெருமைப்படும் 8 விடயங்களை பட்டியிலிட்டுள்ள ஹரீன், தனது அரசியல் எதிர்காலம் பற்றியும் அறிவிப்பு
பேசுவதைத் தவிர வேறெதுவும் செய்யாத கோமாளிகள், மக்களை மகிழ்வித்தாலும், மக்கள் ஒருபோதும் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்க மாட்டார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளர்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையில் இருக்கும் நேரத்தில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தாம் ஆதரவளிக்க எடுத்த முடிவை, எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.
சவால்களுக்கு எதிராக, மனசாட்சிக்கு ஏற்ப சரியான முடிவுகளை எடுக்கும்போது, இயற்கையும் உங்களை ஆசீர்வதிக்கும் என நான் இப்போது உறுதியாக நம்புகிறேன்.
கடந்த 3 மாதங்களில் மக்களுக்காக என்னால் முடிந்த பங்களிப்பை வழங்க முடிந்ததை எண்ணி, திவாலாகிப்போன நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் பொறுப்பேற்காத நபர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
தாம் பெருமைப்படும் சில காரணங்களையும் அவர் பட்டியலிட்ட்டுள்ளார்.
1. வரிசைகளின் சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.
2. விவசாயத்திற்கு உரம் விநியோகம் செய்ய ஆரம்பித்தோம்.
3. விண்ணைத் தொடும் பொருட்களின் விலையை எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது, மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சிறிதளவு கூட குறைக்க முடிந்தது.
4. உலகெங்கிலும் உள்ள நாடுகளால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற எங்களால் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது, மேலும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் எங்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
5. எனது அன்பு நண்பர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கு என்னால் பங்களிக்க முடிந்தது.
6. 22வது திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிந்தது.
7. சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதங்கள் வெற்றி.
8. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பு.
இந்த நிலையில் தனது அரசியல் வாழ்வு தொடர்பில் எதிர்காலத்தில் எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும், தற்போது தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment