Header Ads



குளிப்பதற்கு சவர்க்காரம் கூட இல்லை, மர இலைகளை உண்ண காட்டுக்குச் செல்லும் அவலம் - 1000 பிள்ளைகளின் படிப்பும் நாசமாகியது


-சி.எல்.சிசில்-


உணவு மற்றும் பாடசாலைப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் திம்புலாகல பழங்குடியின 8 கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது பாடசாலை கல்விப் பயணத்தை முற்றாக கைவிட்டுள்ளதாக பழங்குடியினத் தலைவி தெரிவிக்கின்றார்.


தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக ஆதிவாசி பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதில்லை என ஆதிவாசி தலைவி லிசினோனா தெரிவித்துள்ளார்.


தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையால் பட்டினியோடு நாள் கழிப்பவர்கள் வீட்டிலும் பாடசாலையிலும் மயங்கி விழுந்து விடுவதாகக் குறிப்பிடுகிறார்.


தலுகான கிராமத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் கூலி வேலை இழப்பதால், பழங்குடியின சமூகம் வீடற்றவர்களாக மாறியுள்ளதாகவும், சிலர் சவர்க்காரம் கூட இல்லாமல் குளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இன்று ஆதிவாசிகள் பழங்காலத்தைப் போலவே கிழங்கு தோண்டி மரங்களின் இலைகளை உண்பதற்காக மீண்டும் காட்டுக்குச் சென்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.