Header Ads



அலரி மாளிகையில் (Oven) களவாடியவர் நீர்கொழும்பில் கைது -


- Ismathul Rahuman -


   ஐந்து துவிச்சக்கர வண்டிகளைக் களவாடிய சந்தேக நபர் அலரிமாலிகையில்  வெதுப்பியை (oven ) திருடியவர் என தெரியவந்துள்ளது.

       துவிச்சக்கரவண்டிகள் திருடப்பட்டது தொடர்பாக விசாரனை நடாத்தியபோது நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் நீர்கொழும்பு, தழுபொத்த பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.

   இவரிடமிருந்த ஐந்து பைசிக்கள்கள் கைபற்றப்பட்டுள்ளன.

  இவரை  மேலும் விசாரித்த போது இவர் அலரிமாலிகையில் வெதுப்பி (oven) திருடியது மற்றும் இன்னுமொரு இடத்தில் மோட்டார்சசைக்கிள் களவாடியது தொடர்பாக கொழும்பு, கோட்டை பொலிஸாருக்கு தேவையான நபர் என

 தெரியவந்துள்ளது. அலரிமாலிகையில் திருடிய வெதுப்பியும் கைபற்றப்பட்டுள்ளது. இவர்  போதைக்கு அடிமையானவர்

 எனவும் விசாரணையில்  தெரியவந்துள்ளது.   சந்தேகநபரான நீர்கொழும்பு, தழுபொத்தயைச் சேர்ந்த முதுதந்திரிக்கே தம்மிக்க குமார என்பவரை நீர்கொழும்பு மேலதிக நீதிபதி மிலான் ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்திய போது  எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் சந்தேக நபரை 27ம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீர்கொழும்பு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

    நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கே.எம். விக்ரமநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரே சந்தேக நபரை கைது செய்தனர்.

1 comment:

  1. அலரி மாளிகையில் திருட்டுச் சம்பவம் நடைபெறக் காரணிகளாக செயற்பட்டவர்கள் சுதந்திரமாகத் திரியும் போது அற்ப காரணிகளை வைத்து பக்கச் சார்பாக இயங்கும் பொலிஸ் நாட்டைக்களவாடிய கள்ளர்களைக் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.