Header Ads



மத்திய கிழக்கு நாடுகளுக்கே அதிகமானோர் தொழிலுக்காக செல்கின்றனர்


இவ்வருட இறுதிக்குள் சுமார் 5000 இலங்கை பணியாளர்கள் தென் கொரியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


தென் கொரியாவில் ஏற்கனவே சுமார் 3000 பேர் தொழிலில் அமர்த்தப்பட்டுள்ளதாக  பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி யாப்பா தெரிவித்தார்.


இரண்டு வாரத்திற்குள் 200 பணியாளர்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.


இந்த வருடத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டது.


மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகமானோர் தொழிலுக்காக செல்லுகின்ற நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கும் தொழிலுக்காக செல்வோரின் வீதம் முன்னரை விட அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி யாப்பா சுட்டிக்காட்டினார். 

No comments

Powered by Blogger.