Header Ads



துருக்கி, துபாயில் இருந்து கடனுக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள்


துருக்கி மற்றும் துபாயில் இருந்து கடன் அடிப்படையில் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


எனவே பாண் மற்றும் கோதுமை மா சார்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான திட்டத்தை நிறுத்துமாறு வெதுப்பக வர்த்தகர்களுக்கு வர்த்தக அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.


கோதுமை மா இறக்குமதிக்கான கடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு விலை அதிகரிப்பை  நிறுத்துமாறு வெதுப்பக உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. கறுப்புச் சந்தை வியாபாரத்தை நாடு முழுவதும் மிகவும் சுட்சுமமாக பழக்கி தனிப்பட்ட வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கி கொள்ளை வர்த்தகத்தை ஊக்கிவித்தது கபுடாஸின் பொஹொட்டுவ அரசாங்கம். இப்போது விலையை அதிகரிக்க வேண்டாம் என யார் யாரிடம் கூறுவது. குறைந்த பட்சம் பொதுமக்களின் அடிப்படைத் தேவையான பாணை ஒரு கட்டுப்பாட்டு விலையில் கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை. அவசரத்துக்காவது தேனீர் அருந்த கடைக்குச் சென்றால் அதிக பசிக்கு ஏதாவது கடிக்கலாம் என்றால் அதற்குள் விலையை நினைத்து இருதய துடிப்பு அதிகரிக்க ஆரம்பிக்கின்றது. பொதுமக்களின் தேவைகளை சரியாகப் புரிந்து அவர்களுக்கு முன்னுரிமையளித்து ஆளும் அரசாங்கம் மாத்திரம் தற்காலிகமாகவாவது நிலைந்து நிற்கும். இந்த கேடுகெட்ட அரசாங்கம் கொள்ளையடிப்பது, களவாடுவது, பொதுச் சொத்துக்களை விற்று கள்ளர்களின் வங்கிக் கணக்ைக நிரப்புவது தவிர வேறு எந்த நோக்கமுமில்லாத இந்த ஆட்சி செய்யும் கொள்ளைக்காரர்களை உடனடியாகத் தண்டிக்குமாறு இறைவனிடம் கேட்பதைத்தவிர பொதுமக்களுக்கு வேறு வழிவகை இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  2. நாட்டில் கோதுமைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டு அல்லது ஏற்படுவதற்கு நிலைமைகளை உருவாக்கிவிட்டு மந்தி(ரி)கள் கூட்டம் துருக்கிக்கும் துபாய்க்கும் சென்றதன் இரகசியம் என்ன? இன்றைய வியாபாரம் அனைத்தும் இணையம், மின்அஞ்சல் முகவரித் தொடர்பாடல் மூலமாக இடம் பெறுகின்றது. அப்படியானால் ஏன் இந்த மந்தி(ரி) அவசர அவசரமாக கோடான கோடி பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வௌிநாடு சென்றது யார் யாருக்கு எவ்வளவு கமிசன் தேவை என்பதை உறுதிப்படுத்துவது தவிர வேறு என்ன தேவை இருக்கின்றது? திரும்பிய பக்கம் கமிசனும், கொள்ளையும் நடைபெறுவது ரணில் ராஜபக்ஸ சனாதிபதிக்கு விளங்குவதில்லையா அல்லது விளங்காமல் பொதுமக்களை ஏமாற்றுகின்றாரா என பொதுமக்கள் கேட்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.