Header Ads



இலங்கை கிரிக்கெட் அணியின், புதிய சீருடையில் உள்ள சிறப்பு அம்சங்கள்


இவ்வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) ஆண்களுக்கான ரி20 உலகக் கிண்ண இலங்கை தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ கிரிக்கெட் ஜெர்சி இன்ங (30) அறிமுகப்படுத்தப்பட்டது.


தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனமான MAS Holdings நிறுவனம் இதனை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தது.


MAS Holdings நிறுவனத்தின் தலைவர் மஹேஷ் அமலியன் மற்றும் MAS இன் பிரதான நிறைவேற்று அதிகாரி செலான் குணதிலக ஆகியோரால், இலங்கை ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அணித் தலைவர் தசுன் ஷானக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோரிடம் இந்த புதிய சீருடை கையளிக்கப்பட்டது.


இந்த ஜெர்சியை வடிவமைத்து உற்பத்தி செய்த MAS Active நிறுவனம், இன்று (30) அதன் கட்டுநாயக்க Nirmaana - MAS Active அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது  அதனை உத்தியோகபூர்வமாக கையளித்தது.


MAS நிறுவனம் 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனத்துடன் நம்பகமான உறவை பேணி வருகிறது.


வீரர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடை, வசதி மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம்,  தேசிய கிரிக்கெட் அணிக்காக உலகத்தரம் வாய்ந்த செயல்திறன் ஆடைகளை வடிவமைத்து தயாரித்து வருகிறது.


2005-2008 இல் தேசிய கிரிக்கெட் ஜெர்சிகளுக்கான உயர் செயல்திறன் கொண்ட செயற்கை துணிகள், 2012 இல் இலகுரக விளையாட்டு உற்பத்தி மற்றும் sublimation அச்சிடுதல், 2014 இல் வியர்வையைக் குறைக்கும் mesh துணிகள் மற்றும் துளையிடப்பட்ட லேசர்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய உற்பத்தி தொழில்நுட்பங்களை பல ஆண்டுகளாக MAS அறிமுகப்படுத்தியுள்ளது.


2014 ஆம் ஆண்டு முதல், MAS ஆனது, இலங்கையின் தனித்துவமான பாரம்பரியம் மற்றும் அடையாளத்தால் ஈர்க்கப்பட்டு, உடைகளுக்கு அதிக அர்த்தத்தை அளித்து, ஜெர்சியின் அழகியலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் ஜெர்சி அதிக கவர்ச்சிகரமாக உள்ளது.


2022 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் சம்பியன் ஆன அணியின் பெருமையை பிரதிபலிக்கும் வகையிலும், அணியின் பெருமையை உணர்த்தும் வகையிலும் சிங்கம் மற்றும் சிங்கத்தின் பெருமையின் சின்னத்தை இணைத்து, இளம் அணியை களத்தில் சிறப்பாகச் செயல்படத் தூண்டும் வகையில் இந்த ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வியர்வை காரணமாக உடலில் ஒட்டும் ஆடைகளுடன் விளையாடுவது கடினம் என்று 2022 ICC ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.


ஒக்டோபரில் அதிக ஈரப்பதன் கொண்ட அவுஸ்திரேலிய மைதானங்களின் சுற்றுச்சூழல் நிலைமைகளை மதிப்பீடு செய்து, வானிலை முறைகள், வெப்பநிலை மற்றும் மனித உடலின் வியர்வை சுரப்பிகள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னர் MAS Active குழுவால் இந்த புத்தம் புதிய ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ஹது.


MAS Active பல்வேறு அளவிலான காற்றோட்டம் கொண்ட துணிகளை உருவாக்கியது, இது விளையாட்டு வீரரின் புத்துணர்ச்சி மற்றும் வசதிக்காக வியர்வையை விரைவாக ஆவியாக்குகிறது. இது இலகுரக, அதிக உறிஞ்சக்கூடிய, நீட்டக்கூடிய துணிகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் தற்போதுள்ள மற்றும் ஈரப்பத முகாமைத்துவ தொழில்நுட்பத்துடன் கூடுதல் வசதியை பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.


MAS இன் பிரதான நிறைவேற்று அதிகாரி செலான் குணதிலக்க இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், "உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டு ஆடைகளை இலங்கை கிரிக்கெட் அணியை அணிவிக்கச் செய்வதே MAS இல் நாம் செய்யும் செயல்களின் முக்கிய விடயமாக உள்ளது. பரபரப்பான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு எங்கள் அணிகள் தயாராகி வரும் நிலையில், இலங்கையின் கொடி உயரப் பறக்கும் போது, MAS இன் கைவினைத்திறன் மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் மற்றும் அனைத்து இலங்கையர்களின் உற்சாகம் மற்றும் ஆர்வத்தையும் உள்ளடக்கிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உடைகளை எங்கள் வீரர்கள் அணிந்திருப்பதை உலகம் முழுவதிற்கும் உறுதி செய்வோம்.” என்றார்


பல ஆண்டுகளாக, கடலோரத்தில் கரையொதுங்கும் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சியின் அவசியம் போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகமாக SLC ஜெர்சியை MAS நிறுவனம் பயன்படுத்துகிறது.


2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவாக வீசப்பட்ட பிளாஸ்டிக்கை மீள்சுழற்சி செய்யப்பட்ட ICC உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஜெர்சிகளை MAS தயாரித்துள்ளது.


இந்த ஆண்டு வடிவமைக்கப்பட்ட ஜெர்சியில் காடழிப்பு, பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற விளக்க கூறுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது,


இலங்கை போன்ற தீவுகளாக உள்ள நாடுகள் கடல் மட்டம் அதிகரிப்பு, வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வானிலை போன்ற புவி வெப்பமடைதலின் விளைவுகளுக்கு எவ்வாறு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.


உலகெங்கிலும் உள்ள பல உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த செயல்திறன் உடைகளை வழங்குகின்ற MAS நிறுவனத்தின் ஆடைத் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியன வடிவமைப்பு படைப்பாற்றல், நெறிமுறை உற்பத்தி நடைமுறைகள் உலகத்தரத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


MAS பற்றி

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings,  ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தியில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும்  விநியோக  தீர்வு வழங்குநர்களில் ஒன்றாகும். இங்கு 118,000 இற்கும் மேற்பட்டோர் கடமையாற்றுகின்றனர். தற்போது, MAS தனது தயாரிப்புகளை 17 நாடுகளில் முன்னணி நவநாகரீக இடங்களில் அமைந்துள்ள உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்கிறது. MAS இன் வர்த்தக நாமங்கள், தொழில்நுட்பம், FemTech, Start-ups மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆடை பூங்காக்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வேகமாக விரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.