Header Ads



"அடுத்தவரின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கச்சென்று நான் பிரச்சினையில் சிக்கினேன்"


அடுத்தவரின் குழந்தைக்கு பிறப்புச்சான்றிதழ் வழங்க சென்றே தாம் பிரச்சினைக்கு உள்ளானதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எடுத்த தவறான தீர்மானம் காரணமாகவே பெரும்போகச் செய்கை உற்பத்தி பாதிக்கப்பட்டது.அவர் எடுத்த கொள்கை தீர்மானம் தவறானது அல்ல. ஆனால் அந்த கொள்கையை ஒரேயடியாக செயற்படுத்தியமையே தவறாகும்.


கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தமையால், இந்த கருத்துக்களை அப்போது தாம் கூறவில்லை.கோட்டாபய ராஜபக்ச, இரசாயன உரத்தை தடை செய்ய முடிவெடுத்தபோது, அதனை தாம் எதிர்த்தோம்.


எனினும் அது தமது விவசாய அமைச்சுக்கு பொறுப்பானது அல்ல என்று கோட்டாபய கூறினார்.அதற்கு முன்னாள் ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச பொறுப்பாக இருப்பார் என்றும் சுகாதார அமைச்சும், ஜனாதிபதி செயலணியும் இவற்றை கண்காணிக்கும் என்றும் கோட்டாபய தம்மிடம் கூறியதாக மஹிந்தாநந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.


எனவே தமது அமைச்சின் கீழ் இந்த விடயம் வராததன் காரணமாக, தாம் அதில் தலையிடவில்லை. எனினும் இறுதியில் கோட்டாபயவிற்காக தாம் இந்த பிரச்சினைக்கான அதிகமாக பழிச்சொல்லுக்கு உள்ளானதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானம் காரணமாகவே இலங்கையில் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.


தற்போதைய ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டமைக்கான காரணம், 2015ஆம் ஆண்டுக்காலத்தில் இருந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விளைவாகும்.


இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்சவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் ஏற்பட்ட விளைவுகளை காண்பதற்கு இன்னும் சில காலம் செல்லும். ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் நுவரெலியா மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் நுவரெலியாவின் பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் மஹிந்தாநந்த அலுத்கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.