Header Ads



ரணில் சிறைக் கைதியாக மாறியுள்ளார், ராஜபக்சர்கள் நாட்டை வறுமைக்குள் தள்ளினர் - சஜித் தெரிவிப்பு


ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான மொட்டு அரசாங்கம் நாட்டை புதிய வறுமை நிலைக்குள் தள்ளியது எனவும், அதனால் மேல்மட்ட வாழ்வாதாரத்தைக் கொண்டிருந்தவர்கள் கூட கீழ் நிலைக்கு விழ்ந்து விட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இந்த வரையறையற்ற அழுத்தத்தை தாங்க முடியாமல் நாட்டு மக்கள் வீதியில் இறங்கினர் எனவும், இது ஒரு அகிம்சை போராட்டமாக மாறியதோடு இதற்கு ராஜபக்சர்கள் வன்முறை மூலம் பதிலளித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நாட்டுக்கு ஒரு புதிய மாற்று தேவை என்றும், அது பாரம்பரியத்திலிருந்து விலகிய நாட்டிற்கு புதிய வேலைத்திட்டத்தையும் புதிய பாதையையும் காட்டும் மாற்றாக அமைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


தற்போதைய ஜனாதிபதி மொட்டுவின் சிறைகைதியாக மாறியுள்ளதாக தெரிவித்த

எதிர்க்கட்சித் தலைவர், இவர்களுடன் யாராவது இணைந்தால் காக்கையின் கட்டுப்பாட்டிலையே எதிர்காலத்தில் வேட்புமனுக்களை பெற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் மீரிகம தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று (04) பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.